கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பள்ளி ஊழியர்களுக்கு அடிக்கடி பரிசோதனை

கொவிட்-19 தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத பள்ளி ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் வரும் அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து வாரத்துக்கு இரண்டு முறை ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனைகள் (ஏஆர்டி) மேற்கொள்ளப்படும்.

‘தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் அல்லது அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளுங்கள்’ எனும் புதிய திட்டத்தின் கீழ் அந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

அத்துடன், பள்ளியில் தொற்று ஏற்படும்போது, அந்த வகுப்புநிலையில் உள்ள எல்லா மாணவர்களையும் வீட்டில் இருந்து கற்கும் முறைக்கு மாற்றாமல், அதே வகுப்புகள், இணைப்பாட நடவடிக்கைகள் ஆகியவற்றில் உள்ள சக மாணவர்களுக்கு மட்டும் விடுப்பு அல்லது தனிமை உத்தரவு வழங்கப்படும்.

கல்வி அமைச்சர் சான் சுன் சிங் இன்று (ஆகஸ்ட் 13) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், துணைப்பாட அல்லது செறிவூட்டு நிலையங்களில் பணியாற்றுவோர் உட்பட 12 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள சிறுவர்களுடன் அடிக்கடி தொடர்பில் உள்ள அரசாங்கம் சாரா ஊழியர்களுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

மேலும், 12 வயது அல்லது அதற்கும் குறைவான வயதுள்ள பிள்ளைகள் பயிலும் துணைப்பாட, செறிவூட்டு நிலையங்களில் பணியாற்றும் துப்புரவுத் தொழிலாளர்கள் வரும் செப்டம்பர் 3ஆம் தேதியிலிருந்து அடிக்கடி விரைவுக் கிருமிப் பரிசோதனைக்குச் செல்ல வேண்டும்.

சிங்கப்பூர் கொவிட்-19 கிருமித் தொற்றுடன் வாழப் பழகும் சூழலை நோக்கிச் செல்லும் வேளையில், பள்ளிகளில் ஏற்படும் தொற்றுச் சம்பவங்களை நீடித்த நிலைத்தன்மையுள்ள அணுகுமுறையைக் கொண்டு கல்வி அமைச்சு கையாளும் என்று திரு சான் கூறினார்.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்களுக்கு அடிக்கடி பரிசோதனை செய்யும் நடைமுறை பல பணியிடச் சூழல்களில் நடப்புக்கு வரும் என்று சுகாதார அமைச்சு ஏற்கெனவே கூறியிருந்தது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள், தடுப்பூசியை அறவே போட்டுக் கொள்ளாதவர்கள், மருத்துவக் காரணங்களால் அதற்கு தகுதி பெறாதவர்கள் அடிக்கடி விரைவுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

மேலும், இந்த மாதத்திலிருந்து வகுப்புகளுக்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படும் வகையில் பள்ளிகளில் கிருமித்தொற்றுச் சம்பவங்கள் குறிப்பிட்ட அளவில் கையாளப்பட்டு வருவதாக திரு சான் கூறினார்.

கடந்த மே மாதம் முதல் ஜூலை வரை சிங்கப்பூரின் 600,000 மாணவர்களில் 216 பேருக்கு கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் 103 பேர் தொடக்கப்பள்ளி மாணவர்கள்.

பாதிக்கப்பட்ட மாணவர்களில் பாதி பேருக்கு மேல், தொற்று ஏற்படும் முன்னரே தனிமைப்படுத்தப்பட்டுவிட்டனர். அவர்களால் சக பள்ளி மாணவர்களுக்கு கிருமி தொற்றும் அபாயம் ஏதும் இல்லை என்றும் அதனால் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் தடங்களைக் கண்டறிய தேவை இருக்கவில்லை என்றும் கல்வி அமைச்சர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!