கட்டுமானம், கப்பல் பட்டறை, செயல்முறை பொறியியல் துறைகளுக்கு மனிதவள உதவி

கட்டுமானம், கப்பல் பட்டறை, செயல்முறை பொறியியல் துறைகளுக்கு மனிதவள உதவி

3 mins read
3b557471-b78f-4fca-b670-177d2ab4e7ed
கட்டுமானத் துறையில் ஊழியர்களைப் பெற புதிய வசதிகள் உதவும். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கொள்­ளை­நோய் பர­வல் சூழல் கார­ண­மாக மனிதவள பற்­றாக்­ கு­றை­யால் பாதிக்­கப்­பட்ட, கட்­டு­மானம், கடல்­துறை கப்­பல் பட்­டறை, செயல்­மு­றைப் பொறி­யி­யல் துறை­கள், வேலை அனு­ம­தி­யில் (வொர்க் பர்­மிட்) உள்ள தங்­கள் ஊழி­யர்­களைத் தொடர்ந்து தக்­க­வைத்­துக்­கொள்­ள­வும் புதிய ஊழி­யர்­க­ளின் வரு­கையை எளி­தாக்­க­வும் உத­வும் வகை­யில் புதிய நடை­முறை அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஜூலை மாதத்­திற்­கும் டிசம்­பர் மாதத்­திற்­கும் இடையே வேலை அனு­மதி காலா­வ­தி­யா­கும் வெளி­நாட்டு ஊழி­யர்­கள், அவர்­கள் தகுதி நிர்­ண­யத்தை எட்­டா­விட்­டா­லும்­கூட, மேலும் ஈராண்­டு­க­ளுக்கு வேலை அனு­ம­தி­யைப் புதுப்­பிக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்று மனித வள அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

அதி­க­பட்ச காலம் வேலை அனு­ம­தி­யில் வேலை பார்த்­தோர், அதி­க­பட்ச வயது வரம்பை எட்­டி­ய­வர்­களும் இதில் அடங்­கு­வர். ஒரு நிறு­வ­னத்­தில், வேலை அனு­மதி அட்­டை­யில் உள்ள ஊழி­யர்­களில் குறைந்­தது 10 விழுக்­காட்­டி­னர் உயர் திறன் கொண்­ட­வர்­க­ளாக இருக்க வேண்­டும் என்ற கட்­டுப்­பா­டும் இல்லை.

இந்த தற்­கா­லிக கட்­டுப்­பாடு நீக்­க­மும் ஏனைய உத­வி­களும் மேல் குறிப்­பிட்ட மூன்று துறை­க­ளைச் சார்ந்த நிறு­வ­னங்­கள் கொவிட்-19 கார­ண­மாக ஏற்­பட்ட ஊழி­யர் நெருக்­க­டியைச் சமா­ளிக்க உத­வும்.

கடந்த ஆண்டு, இந்­தத் துறை­களில் வேலை அனு­மதி பெற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்கை கிட்­டத்­தட்ட 60,000 ஆகக் குறைந்­துள்­ளது.

இந்­தத் துறை­கள் தங்­கள் செயல்­பா­டு­க­ளுக்­கான ஊழி­யர் தேவை­களைத் தொடர்ந்து பூர்த்தி செய்­வ­தை­யும் முக்­கிய திறன்­க­ளைப் பாது­காப்­ப­தை­யும் இந்த நட­வ­டிக்கை உறுதி செய்­யும் என்று மனிதவளத் துறை அமைச்­சர் டான் சீ லெங் கூறி­னார்.

புக்­கிட் மேரா­வில் உள்ள 'ஸ்ட்­ரெய்ட்ஸ் கன்ஸ்ட்­ரக்­‌ஷன் சிங்­கப்­பூர்' நிறு­வ­னம் தொழில்­நுட்­பத்தை எவ்­வாறு பயன்­ப­டுத்­து­கிறது என்­பதை அறிய டாக்­டர் டான் நேற்று அங்கு வரு­கை­ய­ளித்தார்.

கட்­டுமா­னம், கடல்­துறை கப்­பல் பட்­டறை -செயல்­மு­றைப் பொறி­யி­யல் துறை­கள் பொரு­ளி­ய­லின் முக்­கிய உந்­து­சக்­தி­கள் என்­று அவர் சொன்னார்.

இத்­து­றை­கள் தங்­கள் வர்த்­த­கங்­களை மாற்­றி­ய­மைப்­ப­தற்­கும், மனி­த­வள சார்­பு­நி­லை­யைக் குறைப்­ப­தற்­கும் அர­சாங்க முக­வை­கள் இவற்­று­டன் நெருக்­க­மாக பணி­யாற்றி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

எனி­னும், இந்த முயற்­சி­க­ளுக்கு காலம் எடுக்­கும் என்ற டாக்­டர் டான், புதிய நட­வ­டிக்­கை­கள் உட­னடி ஊழி­யர் கவ­லை­க­ளைத் தீர்­வு­கா­ணும் எனக்­கூ­றி­னார்.

கொவிட்-19 எல்­லைக் கட்­டுப்­பா­டு­கள் கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் நுழைய முடி­யாத இந்த மூன்று துறை­க­ளைச் சேர்ந்த அனைத்து வேலை அனு­மதி ஊழி­யர்­க­ளுக்­கும் கொள்கை ரீதி­யாக ஒப்­பு­தல்­கள் நீட்­டிக்­கப்­படும். இதில் எம்­பி­ளாய்­மென்ட், எஸ்­பாஸ் வொர்க் பர்­மிட் ஆகி­யவை அடங்­கும்.

ஜூலை 1ஆம் தேதி முதல் ஆறு மாத கால நீட்­டிப்பு தானாகவே வழங்­கப்­ப­டு­கிறது. பாதிக்­கப்­பட்ட நிறு­வ­னங்­கள், ஊழி­யர்­களை மீண்­டும் அழைப்­ப­தற்கு போதிய கால அவ­கா­சம் வழங்­கும் வகை­யில் இது மேலும் ஆறு மாதங்­கள் வரை நீட்­டிக்­கப்­ப­ட­லாம்.

அடுத்த ஆண்டு அக்­டோ­பர் 1 முதல் மார்ச் 31 வரை, சீனா, இந்தியா, இலங்கை, தாய்­லாந்து, பங்­க­ளா­தேஷ், மியன்­மார், பிலிப்­பீன்ஸ் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்­கான புதிய வேலை அனுமதி­க­ளுக்­கும் புதுப்­பிப்­பிக்­கும் ஊழி­யர் தீர்­வைக்­கான விலக்­கைப் பெறு­வ­தற்­கான குறைந்­த­பட்ச வேலைக் காலம் நீக்­கப்­படும்.

கட்­டு­மா­னத் துறை­யில் தற்­போதைய மனி­த­வ­ளப் பற்­றாக்­குறை­யைச் சமா­ளிக்க, சிங்­கப்­பூர் குத்­த­கை­யா­ளர்­கள் சங்­கத்துடன் (ஸ்கால்) இணைந்து, முன்னர் வொர்க் பர்­மிட்­டில் வேலை செய்து, பணி முடிந்த அனு­ப­வ­முள்ள ஊழி­யர்­கள் தொடர்ந்து வேலை செய்ய விரும்­பி­னால் அவர்­க­ளது வேலை அனு­ம­தியை மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்­டிப்­பது குறித்து அர­சாங்­கம் திட்­ட­மிட்­டுள்­ளது.

அவர்­க­ளுக்கு 30 நாள் தங்­கு­வ­தற்கு அனு­மதி அளிக்­கப்­படும். அக்­கா­ல­கட்­டத்­தில் தொழிற்­சங்­கம் வீட்­டு­வ­சதி, உணவு போன்ற தேவை­களை வழங்­கும். அதே நேரத்­தில் வேலை வாய்ப்­பு­க­ளை­யும் பெற்­றுத்­த­ரும்.

வேலை அனு­மதி பெற்­ற­வர்­களை தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் குறித்து குறிப்­பிட்ட டாக்­டர் டான், "அவர்­கள் திரும்­பிச் சென்று, வேலை அனு­ம­திக்கு விண்­ணப்­பிக்­கும் செயல்­மு­றையை மீண்­டும் முத­லி­லி­ருந்து செய்­வ­தற்குப் பதி­லாக இங்­கி­ருந்­த­ப­டியே வேலை­யைத் தொடர தொழில்­து­றை­யு­டன் இணைந்து செயல்­ப­டு­வது பயனுள்­ள­தாக இருக்­கும்," என்­றார்.

குறிப்புச் சொற்கள்
கட்டுமானத் துறைவெளிநாட்டு ஊழியர்