சிங்கப்பூரில் முதன்முதலாக பாண்டா குட்டி ஒன்று பிறந்துள்ளது. ரிவசர்ஃபாரியின் முதல் பாண்டா கரடி, சனிக்கிழமை காலை 7.50 மணிக்குப் பிறந்தது.
காய் காய், ஜியா ஜியா என்ற பாண்டாக்களுக்கு பிறந்த இந்தக் குட்டி, "இவ்வாண்டின் தொடர்ச்சியான தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு மகிழ்ச்சிகரமான உந்துதலை அளித்துள்ளது," என்று சிங்கப்பூர் வனவிலங்கு காப்பகம் தெரிவித்தது.
பாண்டாக்களை கூண்டுகளில் வளர்ப்பது கடினம்.

