அடுத்த மலேசிய பிரதமர் நியமிக்கப்படும்வரை காபந்து பிரதமராக முகைதீன் தொடருவார்

அடுத்த மலேசிய பிரதமர் நியமிக்கப்படும்வரை காபந்து பிரதமராக முகைதீன் தொடருவார்

1 mins read
c9370ab2-9368-45b0-aec2-d14fbf2546a3
படம்: முகைதீன் யாசின்/ஃபேஸ்புக் -
Google News Preferred Icon

மலேசியாவின் காபந்து பிரதமராக திரு முகைதீன் யாசின் தொடருவார் என்று தேசிய அரண்மனை தெரிவித்துள்ளது.

அரண்மனையில் இன்று (ஆகஸ்ட் 16) மலேசிய மாமன்னரை சந்தித்து அவரிடம் தமது பதவி விலகல் கடிதத்தை திரு முகைதீன் சமர்ப்பித்தார். அதை மாமன்னர் ஏற்றுக்கொண்டார்.

அடுத்த பிரதமர் நியமிக்கப்படும்வரை பிரதமர் கடமைகளை திரு முகைதீன் தொடர்ந்து ஆற்றுவார்.

இதன் தொடர்பில் மாமன்னர் அப்துல்லா அகமது ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டு மக்களின் நலன், பாதுகாப்பைக் கருதி இப்போதைக்கு பொதுத் தேர்தலை நடத்துவது சிறப்பான தேர்வு அல்ல என்று கூறினார்.

இந்நிலையில், அமைச்சர்களின் பதவி விலகலை அறிவியல், தொழில்நுட்ப, புத்தாக்கத் துறை அமைச்சர் கைரி ஜமாலுதீன் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்