திரு முகைதீன் யாசினுக்கு அடுத்து புதிய பிரதமருக்கான தங்களது தெரிவை மலேசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்வைக்கவேண்டும் என்று மலேசிய மாமன்னர் காலக்கெடு வைத்ததிருக்கிறார். 18 மாதங்களுக்குப் பிறகு மாமன்னர், மலேசியாவில் நிலவும் அரசியல் நிச்சயமின்மையைத் தீர்க்க மீண்டும் ஒரு முக்கிய முடிவை எடுத்திருக்கிறார்.
திரு முகைதீன் யாசின் நேற்று பதவி விலகியதை அடுத்து இன்று மதியம், முக்கிய கட்சித் தலைவர்கள் அரண்மனையில் கூடியுள்ளனர். இவர்கள் அனைவரையும் மாமன்னர் இவ்வாறு அழைத்தது வியப்புக்குரிய நடவடிக்கையாக பார்க்கப்படுவதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
அம்னோ, பார்ட்டி பெஜுங் தனா ஆயர், பார்டி இஸ்லாம் மற்றும் பக்கத்தான் ஹரப்பான் ஆகியவற்றின் தலைவர்கள், பிற்பகல் சுமார் 2 மணிக்கு அரண்மனையை அடைந்தனர்.
இந்தத் தலைவர்கள் அனைவரையும் தங்களது வேறுபாடுகளை விடுத்து ஒருவரையே பிரதமரகும்படி ஆதரவு தர மாமன்னர் இவர்களைக் கேட்டுள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

