பணிப்பெண்ணுக்கு சூடு போட்ட முதலாளிக்கு ஓராண்டு சிறை

பணிப்பெண்ணுக்கு சூடு போட்ட முதலாளிக்கு ஓராண்டு சிறை

1 mins read
cbc3ab26-93c1-4ce7-ac0e-5f97e5e4616f
-
Google News Preferred Icon

மது அருந்திய பிறகு, மதுமயக்கத்தில் இருந்த ஆடவர், சூடாக்கப்பட்ட இரும்புக் கம்பியை எடுத்து எடுத்து தமது வீட்டில் வேலை பார்த்த பணிப்பெண்ணின் இடது கரத்தில் சூடு காயத்தை ஏற்படுத்தினார்.

ராஜமாணிக்கம் சுரேஷ் குமார் என்ற அந்த ஆடவர் மறுநாள் வீடு திரும்பி அந்தப் பெண்ணின் கரத்தைப் பிடித்து இழுத்து அந்தப் பெண்ணின் அறைக்குள் தள்ளினார்.

வடிவேல் கெளதமி என்ற அந்தப் பணிப் பெண்ணை தாக்கிய அந்த ஆடவரைக் குற்றவாளி என்று நீதிமன்றம் முன்னதாகத் தீர்ப்பளித்தது.

திருவாட்டி வடிவேல், ஏப்ரல் 2018ஆம் ஆண்டு முதல் ராஜமாணிக்கத்தின் வீட்டில் வேலை பார்க்கத் தொடங்கினார். ஓய்வின்றி ஒவ்வொரு நாளும் அவரை வேலை செய்ய ராஜமாணிக்கம் வற்புறுத்தியதாக அவர் புகார் செய்தார்.

இது குறித்து அந்தப் பணிப்பெண் 2018 ஆம் ஆண்டு ஜூலையின்போது தமது முகவரிடம் புகார் செய்தார். பிறகு அவர் ராஜமாணிக்கத்தின் மனைவி, நடந்தது குறித்து தெரிவித்தார். பிறகு அந்த முகவர் ராஜமாணிக்கத்தின் மனைவியிடம் நடந்தது குறித்து தெரிவித்தார்.

எந்தப் புகாராக இருந்தாலும் தம்மிடம் கூறும்படி ராஜமாணிக்கத்தின் மனைவி சொன்னதாக திருவாட்டி வடிவேல் கூறினார்.

2018 அக்டோபர் 18ஆம் தேதியன்று ராஜமாணிக்கம் குடித்துவிட்டு வீடு திரும்பினார். திருவாட்டி வடிவேல் அவருக்கு தோசை வார்த்துக்கொண்டிருந்தபோது, தீயில் இடப்பட்ட கரண்டியைக் கொண்டு அவரைச் சுட்டார் ராஜமாணிக்கம்.

பாதிக்கப்பட்ட பணிப்பெண், நடந்தது குறித்து தமது கணவரிடம் கூறியதை அடுத்து அவர் போலிசாரிடம் புகார் செய்தார்.