புற்றுநோய் சிகிச்சை தொடர்பில் மேம்படுத்தப்பட்ட மெடிஷீல்டு லைஃப் காப்புறுதித் திட்டம்

3 mins read

நோயாளிகள் மாதம் தலா $9,600 வரை கோரலாம்

புற்­று­நோய் நோயா­ளி­கள் அடுத்த ஆண்டு­மு­தல் தங்­க­ளின் வெளி­நோ­யாளி சிகிச்­சைக்­கான கட்­ட­ணத்­தில் கூடு­தல் உதவி பெற­லாம். அவர்­க­ளுக்­கான மருந்­தைப் பொறுத்து, மெடி­ஷீல்டு லைஃப் காப்­பு­று­தித் திட்­டத்­தின்­கீழ் மாதம் $200 முதல் $9,600 வரை வழங்­கப்­ப­ட­லாம்.

தற்­போது இத்­த­கைய நோயா­ளி­களுக்கு மாதம் தலா $3,000 வழங்­கப்­பட்டு வரு­கிறது. இந்­தத் தொகை அடுத்த ஆண்­டு­மு­தல் மாற­வுள்­ளது.

இத்­து­டன் அர­சாங்க மானி­யத்­திற்கு மேலும் அதி­க­மான புற்­று­நோய் சிகிச்­சை­கள் தகு­தி­பெ­ற­வுள்­ளன. 'மருந்து உதவி நிதி'த் திட்­டத்­தின்­கீழ் விலை அதி­க­மான மருந்­து­கள் சில­வற்­றுக்கு அர­சாங்­கம் மானி­யம் வழங்­க­வுள்­ளது. இதற்­காக தனி­ந­பர் மாத வரு­மா­னம் தகுதி­நிலை $2,800லிருந்து $6,500க்கு உயர்த்­தப்­படும். இம்­மாற்­றங்­க­ளால் மானிய உதவி பெற்­றுள்ள புற்­று­நோய் நோயா­ளி­கள், அடுத்த செப்­டம்­பர் மாதம் முதல் தங்­களின் வெளி­நோ­யாளி சிகிச்­சைக்­கான முழு கட்­ட­ணத்­தைக் காப்­பு­றுதி மற்­றும் மெடி­சேவ் திட்­டம் வழி செலுத்­து­வர். தற்­போது நோயா­ளி­களில் 70 விழுக்­காட்­டி­ன­ருக்கு மட்­டுமே இந்த நிலை உள்­ளது.

புற்­று­நோய் தொடர்­பான பரா­ம­ரிப்­புக்கு அதி­கச் செல­வா­வது குறித்து ஆராய்­வ­தற்­காக குழு ஒன்றை மெடி­ஷீல்டு லைஃப் மன்­றம் அமைத்­தது. மெடி­ஷீல்டு லைஃப் திட்­டத்­தின்­கீழ் கட்­டுப்­ப­டி­யா­கக்­கூ­டிய கட்­ட­ணத்­தில் பலன் தரும் வெளி­நோயாளி புற்­று­நோய் மருத்­துவ சிகிச்­சை­கள் யாவை என்­ப­தைப் பட்­டி­ய­லி­டு­மாறு சுகா­தார அமைச்­சுக்­கும் மன்­றம் பரிந்­துரை செய்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில் 'ஐபி'கள் எனப்­படும் ஒருங்­கி­ணைந்த ஷீல்டு காப்­பு­று­தித் திட்­டங்­க­ளின்­கீழ் தனி­யார் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு சிகிச்­சைக்­குச் செல்­லும் நோயா­ளி­கள் 2023ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதம்­முதல் இப்­பட்­டி­ய­லில் இல்­லாத மருந்து தொடர்­பில் தொகை கோர இய­லாது.

இருப்­பி­னும் இப்­பு­திய விதி­மு­றை­கள் துணைக் காப்­பு­று­தி­க­ளுக்­குப் பொருந்­தாது. இத்­த­கைய துணைக் காப்­பு­று­தி­கள், நோயா­ளி­யின் மருத்­து­வச் செல­வில் ஒரு பகு­தியை அல்­லது முழு­மை­யாக கட்­டக்­கூ­டி­ய­தா­கும்.

'ஐபி'க்கான சந்­தாவை மெடி­சேவ் மூலம் செலுத்­து­வ­தும் துணைக் காப்­புறுதிக்­கான சந்தா ரொக்­க­மா­கச் செலுத்து­வ­தும் இதற்­குக் கார­ண­மா­கும்.

'மெடி­ஷீல்டு லைஃப்' காப்­பு­று­தித் திட்­டத்­திற்­கும் மேல் சுகா­தா­ரக் காப்­பு­று­தித் திட்­டங்­க­ளைக் கூடு­தல் பலன்­கள் கூடி­ய­தாக தனி­யார் காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் வழங்­கு­வ­து­தான் 'ஐபி'.

மற்ற மருத்­துவ சிகிச்­சை­க­ளைக் காட்­டி­லும் புற்­று­நோய் சிகிச்­சை­க­ளுக்­கான கட்­ட­ணக் கோரிக்­கை­கள் துரி­த­மாக பன்­ம­டங்­காகி விட்­ட­தால் மன்­றம் இதில் கவ­னம் செலுத்­தி­யது. இதன்­படி மற்ற மருந்­து­க­ளுக்­கான செலவு, ஆண்டு அடிப்­ப­டை­யில் ஆறு விழுக்­காடு அதி­கரிக்க, புற்­று­நோய் மருந்­துக்­கான செலவு 20 விழுக்­காடு அதி­க­ரித்­துள்­ளது. சிங்­கப்­பூ­ரில் மருந்­து­க­ளுக்­கான செல­வில் புற்­று­நோய் மருந்­துக்கு மட்­டும் 24% செல­வா­வ­தாக அறி­யப்­ப­டு­கிறது.

இந்த அதி­க­ரிப்பு தொடர்ந்­தால், 2030ஆம் ஆண்­டுக்­குள் புற்­று­நோய்க்­கான மருந்­து­க­ளுக்­குச் செல­வி­டப்­படும் தொகை $2.7 பில்­லி­யனை எட்­டி­வி­டும் என்று மன்­றம் முன்­னு­ரைத்­துள்­ளது.

புற்­று­நோய் மருந்­து­க­ளுக்­கான செலவு அதி­க­ரித்­தி­ருப்­ப­தற்­குப் பல கார­ணங்­கள் உள்­ளன. கூடு­தல் நபர்­க­ளுக்­குப் புற்­று­நோய் ஏற்­பட்­டி­ருப்­பது அவற்­றில் ஒன்று. கடந்த ஆண்­டில் மட்­டும் 29,100 பேர் தங்­க­ளின் வெளி­நோ­யாளி புற்­று­நோய் மருந்து சிகிச்­சைக்­காக 'மெடி­ஷீல்டு ஃலைப்' திட்­டத்­தின்­கீழ் மொத்­தம் $168 மில்­லி­யன் கோரி­யி­ருந்­த­னர்.

மருத்­துவ நிறு­வ­னங்­கள், சிங்­கப்­பூரி­டம் புற்­று­நோய் மருந்­து­க­ளுக்­கான விலையை அதி­கப்­ப­டுத்தி விற்­ப­தும் மற்­றொரு கார­ண­மா­கும். இந்­நி­லை­யில், கிட்­டத்­தட்ட 150 மருந்­து­க­ளைக் கொண்ட பட்­டி­யல், சுகா­தார அமைச்­சின் இணை­யப்­பக்­கத்­தில் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

மேலும் விவரம் - பக்­கம் 2ல்