இஸ்மாயில் சப்ரியை பிரதமர் பதவிக்கு ஆதரிக்கும் அம்னோ உறுப்பினர்கள்

இஸ்மாயில் சப்ரியை பிரதமர் பதவிக்கு ஆதரிக்கும் அம்னோ உறுப்பினர்கள்

1 mins read
a63d0d63-df7a-438b-8fe1-e8e1758159e1
-
Google News Preferred Icon

மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக அம்னோவின் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தமது கட்சியினரால் முன்மொழியப்பட்டுள்ளார். அவரது கட்சியைச் சேர்ந்த 38 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவரை ஆதரிக்க நேற்றிரவு முடிவு செய்தனர்.

அம்னோவின் தலைமையிலான பாரிசான் நேஷனல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்திய சந்திப்பில் அந்த பேரா நாடாளுமன்ற உறுப்பினரை முன்மொழிய ஒப்புக்கொண்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

"ஒரே ஒருவர் பிரதமராக முன்மொழியப்படுவார். அவர்தான் இஸ்மாயில் சப்ரி," என்று அம்னோவின் தலைமை செயலாளர் அகமது மஸ்லான் தெரிவித்தார்.

அம்னோவின் தலைமை மன்ற உறுப்பினர் தாஜூடின் ரஹ்மான் , இந்தச் செய்தியை உறுதிப்படுத்தினார்.