சமூகத்தில் புதிதாக 49 பேருக்கு கிருமித்தொற்று பாதிப்பு

சமூகத்தில் புதிதாக 49 பேருக்கு கிருமித்தொற்று பாதிப்பு

1 mins read
638716e0-084f-48ff-af65-ad919b6e990e
-

சிங்கப்பூரில் புதிதாக 49 பேருக்கு சமூக அளவில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. புதிய சம்பவங்களில் 23 பேர், முந்தைய கிருமித்தொற்றுகளுடன் தொடர்புடையவர்கள். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் எழுவருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டபோது அவர்கள் தனிமைப்படுத்தப்படவில்லை. எஞ்சியுள்ள 19 பேரின் தொடர்புத் தடங்கள் அறியப்படவில்லை என்று சுகாதார அமைச்சு தெரிவித்தது. சமூகத்தில் பாதிக்கப்பட்டோரில் ஒருவர், 70 வயதுக்கும் மேற்பட்ட மூத்தவர்.

வெளிநாடுகளிலிருந்து கிருமித்தொற்றுடன் சிங்கப்பூருக்கு வந்த நால்வருக்கு தனிமை உத்தரவு அல்லது வீட்டில் தங்கும் உத்தரவு கொடுக்கப்பட்டது.

ஆக மொத்தத்தில் இன்று புதிதாக 53 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று இருப்பது பதிவாகியுள்ளது. இதனுடன் இங்குள்ள கிருமித்தொற்றுகளுக்கான மொத்த எண்ணிக்கை 66, 334.