தேசிய தின அணிவகுப்பின் மேடை நிகழ்ச்சி - வரும் சனிக்கிழமை

தேசிய தின அணிவகுப்பின் மேடை நிகழ்ச்சி - வரும் சனிக்கிழமை

1 mins read
3d4a6d04-be76-43c0-94f9-80f4d10e4394
-

தேசிய தின அணிவகுப்பின் மேடை நிகழ்ச்சி மரினா பேயிலுள்ள மிதக்கும் மேடையில் வரும் சனிக்கிழமை நடைபெறவிருக்கிறது. மேடை ஏறுவோரின் எண்ணிக்கை, 2018இல் மேடையேறியவர்களின் எண்ணிக்கையான 3,000ஐ விடக் குறைவு.

தேசிய பல்கலைவக்கழகம், ரிப்பப்ளிக் பலதுறை தொழிற்கல்லூரி, பள்ளிகளையும் சமூகக் குழுக்களையும் சேர்ந்த கிட்டத்தட்ட 600 பங்கேற்பாளர்களின் மெய்நிகர் நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படும்.

இந்த ஆண்டு அணிவகுப்பைக் காண அழைக்கப்பட்டுள்ள பார்வையாளர்களில் ஆசிரியர்கள், உணவங்காடி கடைக்காரர்கள், போக்குவரத்து ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் அடங்குவர் என்று அணிவகுப்பின் செயற்குழு தலைவர் டான் செங் குவீ கடந்த மாதம் தெரிவித்தார்.