மலேசிய மாமன்னர்: புதிய பிரதமர் ஆதரவை நிரூபிக்க வேண்டும்

மலேசிய மாமன்னர்: புதிய பிரதமர் ஆதரவை நிரூபிக்க வேண்டும்

2 mins read
4eaaf281-fc4f-424d-9782-9bac1b6057f5
அடுத்த மலேசியப் பிரதமராகக் கூடிய வாய்ப்புள்ளவரும் அம்னோவின் துணைத் தலைவருமான திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோப். கோப்புப் படம்: பெர்னாமா -

மலே­சி­யா­வில் புதி­தாக நிய­மிக்­கப்­ப­ட­வுள்ள பிர­த­மர் முடிந்­த­வரை விரை­வாக நாடா­ளு­மன்­றத்­தில் நம்­பிக்கை வாக்­கெ­டுப்பு நடத்தி தமக்­கான ஆத­ரவை நிரூ­பிக்­க­ வேண்­டும் என்று அந்­நாட்டு மாமன்­னர் சுல்­தான் அப்­துல்லா அக­மது ஷா உத்­த­ர­விட்­டுள்­ளார்.

மாமன்­னர் நேற்று முன்­தி­னம் அர­சி­யல் கட்­சி­க­ளு­டன் நடத்­திய சந்­திப்­பில் இவ்­வாறு தெரி­வித்­த­தாக அரண்மனை நேற்று விடுத்த அறிக்கை கூறி­யது.

மேலும், புதிய பிர­த­மரை உறு­திப்­ப­டுத்த ஒன்­பது மாநில மன்­னர்­க­ளு­டன் நாளை மாமன்­னர் சந்­திப்பு நடத்­தப் போவ­தாக நேற்­றைய அறிக்கை குறிப்­பிட்­டது.

மாநில மன்­னர்­க­ளு­ட­னான அச் சிறப்­புச் சந்­திப்­பில் தற்­போ­தைய விவ­கா­ரங்­கள் பற்றி பேசப்­படும்.

அண்­மைய வாரங்­களில் நில­விய அர­சி­யல் நெருக்­க­டி­யின் கார­ண­மாக முன்­னை­யப் பிர­த­மர் முகை­தீன் யாசின் நேற்­று ­முன்­தினம் பதவி வில­கி­னார். இதைத் தொடர்ந்து கடந்த 18 மாதங்­களில் மலே­சி­யா­வில் இரண்­டா­வது முறை­யாக பிர­த­மர் பத­வி­யில் யாரும் இல்­லாத நிலை ஏற்­பட்­டுள்­ளது.

புதிய பிர­த­மரை அடை­யா­ளம் காணும் பணி தொட­ரும் வேளை­யில் அனைத்து கட்­சி­களும் ஒன்­றா­கப் பணி­யாற்ற வேண்­டும் என்­றும் மாமன்­ன­ரின் அறிக்கை கூறி­யது.

மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் உள்ள 220 உறுப்­பி­னர்­களும் நேற்று பிற்­ப­கல் 4 மணிக்­குள் பிர­த­ம­ராக தாங்­கள் முன்­மொ­ழி­யும் பெயரை அரண்மனை­யி­டம் ஒப்­ப­டைக்க வேண்­டும் என்று மாமன்­னர் நேற்று முன்­தி­னம் கூறி­யி­ருந்­தார்.

ரக­சி­ய­மாக சமர்ப்­பிக்­கப்­படும் அந்­தப் பெயர்­களில் ஒரு­வ­ருக்கு தெளி­வான பெரும்­பான்மை இருக்­கும் பட்­சத்­தில், மலே­சிய மாமன்­னர் அவ­ருக்கு உட­ன­டி­யாக பத­விப் பிர­மா­ணம் செய்து­வைப்­பார்.

முன்­னைய துணைப் பிர­த­ம­ரும் அம்னோ கட்­சி­யின் துணைத் தலை­வ­ரு­மான திரு இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப், முன்­னைய துணைப் பிர­த­ம­ரும் எதிர்த்­த­ரப்­புத் தலை­வ­ரு­மான டாக்­டர் அன்­வார் இப்­ரா­ஹிம் ஆகிய இரு­வ­ரில் ஒரு­வ­ருக்கு ஆத­ரவு தெரி­விப்­பது பற்றி அர­சி­யல் கட்­சி­கள் கடந்த இரண்டு நாள்­க­ளாக முடிவு எடுத்து வந்த நிலை­யில் திரு இஸ்­மா­யில் சப்­ரி­தான் அடுத்த பிர­த­மர் ஆகக் கூடும் என்று நம்­பப்­ப­டு­கிறது.

ஆளும் கூட்­ட­ணி­யில் உள்ள அம்னோ, பெர்­சத்து, பாஸ் ஆகி­யவை திரு இஸ்­மா­யில் சப்ரி யாக்­கோப்­புக்கு தங்களின் ஆத­ரவை உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளன.

அம்­னோ­வின் 38 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களும் திரு இஸ்­மா­யில் சப்ரியை ஒரு­ம­ன­தாக தேர்வு செய்­த­னர் என்று அக்­கட்­சி­யின் தலை­மைச் செய­லா­ளர் அகமது மாஸ்­லான் தெரி­வித்­தார்.

பெர்­சத்து கூட்­ட­ணி­யின் உச்­ச­மன்ற உறுப்­பி­னர் திரு எஸ்ஸி சயாஸ்லீ ஷீத், கூட்­ட­ணி­யின் 35 மன்ற உறுப்­பி­னர்­களும் திரு இஸ்­மா­யில் சப்­ரியை பிர­த­மர் தெரி­வாக உறுதி செய்­துள்­ள­னர் என்று கூறி­னார். 18 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கொண்ட பாஸ் கட்­சி­யும் திரு இஸ்­மா­யில் சப்­ரி­யைத் தெரிவு செய்­துள்­ள­தா­கக் கூறி­யது.

டாக்­டர் அன்­வார் இப்­ரா­ஹிமின் பக்­கத்­தான் ஹரப்­பான் கூட்­ட­ணி­யையும் மற்ற எதிர்க்­கட்­சி­களையும் சேர்த்தால் அவ­ருக்கு சுமார் 105 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு உள்­ள­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் பிர­த­மர் பத­வி­, நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை ஆகிய வற்றைப் பெற அவ­ருக்கு 111 உறுப்­பி­னர்­க­ளின் ஆத­ரவு தேவை.