பயணிகளுக்கு சிங்கப்பூரில் வெவ்வேறு பாதுகாப்பு நடைமுறைகள்

பயணிகளுக்கு சிங்கப்பூரில் வெவ்வேறு பாதுகாப்பு நடைமுறைகள்

2 mins read

உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் அவ­ச­ர­காலப் பயன்­பாட்­டுப் பட்­டி­ய­லில் இடம்­பெறும் ஒரு தடுப்­பூ­சியை முழு­மை­யா­கப் போட்­டுக்­கொண்ட பய­ணி­கள், சிங்­கப்­பூர் வரும்­போது தடுப்­பூசி அடிப்­ப­டை­யி­லான வெவ்­வேறு பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தகு­தி­பெ­று­வர்.

இதை நேற்று அறி­விக்கை வெளி­யிட்ட சுகா­தார அமைச்சு, இன்று இரவு 11.59 மணி­மு­தல் சிங்­கப்­பூ­ருக்­குள் வரு­வோ­ருக்­குச் சேதம் ஏற்­படா தன்­மை­யுடைய ஒட்­டு­வில்­லை­களை குடி­நு­ழைவு, சோத­னைச் சாவடி ஆணை­யம் வழங்­கும் என்று குறிப்­பிட்­டது.

சிங்­கப்­பூ­ரின் தடுப்­பூ­சித் திட்­டத்­தின்­கீழ் போடப்­படும் 'ஃபைசர்-பயோ­என்­டெக்/கொமிர்­னாட்டி' மற்­றும் 'மொடெர்னா' தடுப்­பூ­சி­க­ளு­டன் 'ஆஸ்ட்­ரா­ஸெ­னகா', 'ஜான்­சன் & ஜான்­சன்', 'சினோ­ஃபார்ம்', 'சினோ­வேக்' மற்­றும் 'கொவி­ஷீல்டு' தடுப்­பூ­சி­களும் இப்­பட்­டி­ய­லில் அடங்­கும்.

சிங்­கப்­பூ­ரின் குடி­நு­ழைவு சோத­னைச்­சா­வ­டி­க­ளுக்கு வரும் பய­ணி­கள், தங்­களின் கடப்­பி­த­ழில் ஒட்­டு­வ­தற்­காக இந்த ஒட்­டு­வில்­லை­யைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு முன் தங்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­பட்­டி­ருப்­ப­தைக் காட்­டும் ஆங்­கில மொழி சான்­றி­தழ் ஒன்றை அதி­கா­ரி­க­ளி­டம் காட்ட வேண்­டும்.

அடுத்த மாதத்­திற்­குள் சிங்­கப்­பூ­ரர்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், மற்ற நாடு­க­ளி­லி­ருந்து பய­ணிக்­கும் நீண்­ட­கால அட்டை வைத்­தி­ருப்­போர் மற்­றும் குறு­கி­ய­கால வரு­கை­யா­ளர்­கள் ஆகி­யோரை 'டிரேஸ்­டு­கெ­தர்' செயலி அல்­லது சாத­னம் வழி 'சேஃப்என்ட்ரி பிசி­னஸ்' செயலி மூலம் அடை­யா­ளம் காணும் வகை­யில் கணி­னிக் கட்­ட­மைப்­பு­கள் மேம்­ப­டுத்­தப்­படும் என்று குறிப்­பிட்­டது அமைச்சு.

இத­னால் சிங்­கப்­பூ­ரில் வெவ்­வேறு பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவர்­கள் தகு­தி­பெ­று­வர். இதன்­படி, நிகழ்­வுக்கு முன்­ன­தாக பரி­சோ­தனை செய்து­கொள்­வது போன்ற நடை­முறை தேவை­யில்­லா­மல் அமர்ந்து சாப்­பிட முடி­யும். மற்ற பய­ணி­கள் கொவிட்-19 பரி­சோ­த­னையை மேற்­கொண்டு அதில் தங்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறு­திப்­ப­டுத்த வேண்­டும். இந்­தப் பரி­சோ­தனை 24 மணி­நே­ரத்­திற்கு மட்­டுமே செல்லு­ப­டி­யா­கும்.

கூடு­தல் செய்தி - பக்­கம் 2ல்