வெளிநாட்டுப் பங்களிப்புகளுக்கு சிங்கப்பூர் தொடர்ந்து முக்கியத்து வம் கொடுப்பதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று தெரிவித்தார்.
அத்துடன் சிங்கப்பூர் தொடர்ந்து திறந்த பொருளியலாக இருக்கும் என ஐரோப்பிய தொழிற்சபை உறுப்பினர்களிடம் திரு ஓங் பேசியபோது உறுதி அளித்தார்.
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்ந்து வரவேற்கப்படும் என்றும் அவை பாதுகாக்கப்படும் என்றும் திரு ஓங் கூறினார்.
உள்ளூர் ஊழியரணிக்குப் பலம் சேர்க்கும் வகையில் சிங்கப்பூரில் வெளிநாட்டுத் திறனாளர்கள் தொடர்ந்து வேலையில் அமர்த்தப்படுவர் என்று அவர் தெரிவித்தார்.
"இந்த உலகம் நமக்கு வழங்கும் தொழில்நுட்பத்துக்கும்
நிபுணத்துவத்துக்கும் நாங்கள் தொடர்ந்து மதிப்பளிப்போம்," என்றார் அமைச்சர் ஓங்.
சிங்கப்பூர் தொடர்ந்து வெற்றி நடைபோட உலகளாவிய சந்தை
களுடன் வர்த்தகம் செய்வது மிகவும் அவசியம் என்றார் அவர்.
ஆனால் இதுகுறித்து
அண்மையில் சில பிரச்சினைகள் எழுந்துள்ளதை திரு ஓங் சுட்டினார்.
வெளிநாட்டு ஊழியர்கள், தடையில்லா வர்த்தகம் குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
"தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களைக் காட்டி வெளிநாட்டவர்களுக்கு எதிராக வெறுப்
புணர்வை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன," என்று அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
தடையில்லா வர்த்தக ஒப்பந்தங்களைத் தற்காத்து நாடாளுமன்றத்தில் தாமும் மற்ற நாடாளு மன்ற உறுப்பினர்களும் பேசியதாக அவர் கூறினார்.
திறந்த பொருளியலுக்கு
மக்கள் செயல் கட்சி மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாக அவர் வலியுறுத்தினார்.
இருப்பினும், உலகமயமாதலால் ஏற்படும் பின்னடைவுகளையும் அவர் பட்டியலிட்டார்.
உள்ளூர் ஊழியர்களுக்கும் வெளிநாட்டு ஊழியர்களுக்கும் இடையிலான போட்டி, குறிப்பிட்ட சில துறைகளில் அல்லது நிறு
வனங்களில் அளவுக்கு அதிகமான வெளிநாட்டு ஊழியர்கள் இருப்பது போன்ற பிரச்சினைகளை அவர் உதாரணம் காட்டினார்.
இந்தப் பிரச்சினைகளுக்கு சிங்கப்பூர் அரசாங்கம் தீர்வு காணும் என்றார் அவர்.
"இப்பிரச்சினைகளைக் கடுமையான முறையில் எதிர்கொள்ளாவிட்டால் வெளிநாட்டவர்
களுக்கு எதிரான வெறுப்புணர்வு அதிகரிக்கும்.
"வலதுசாரி அரசியலுக்கு அது வித்திடும், அத்தகைய அரசியல் சிங்கப்பூரில் வேரூன்றக்கூடாது என்பதில் சிங்கப்பூர் அரசாங்கம் உறுதியாக உள்ளது," என்றார் திரு ஓங்.

