மலேசியாவின் ஒன்பதாவது பிரத
மராக அம்னோவின் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் இன்று பிற்பகல் 2.30 மணிக்குப் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற மாநில மன்னர்களுடன் நேற்று கலந்துரையாடிய பிறகு மாமன்னர் அப்துல்லா அகமது ஷா இதை உறுதி செய்தார்.
"புதிய பிரதமர் நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து, மலேசியாவில் நிலவும் அரசியல் நெருக்கடி
முடிவுக்கு வர வேண்டும் என மாமன்னர் விரும்புகிறார். குறுகிய மனப்பான்மையுடன் செயல்படாமல், அரசியல் லாபம் நாடாமல் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று மாமன்னர் தெரிவித்துள்ளார்.
"நாட்டின் நலனையும் நாட்டு மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு கொவிட்-19 நெருக்கடிநிலையை எதிர்கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒற்றுமை
யுடன் இருந்து செயல்பட வேண்டும் என்று மாமன்னர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
"கொவிட்-19 நெருக்கடிநிலையால் நாட்டின் பொருளியல் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் மக்கள் அவதியுறுகின்றனர் என்றும் மாமன்னர் நினைவூட்டுகிறார். எனவே, அரசியல் நெருக்கடியில் இழுபறி ஏற்பட்டு அவர்
களுக்குக் கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தக்கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார். பொதுமக்களுக்குச் சேவையாற்றுவதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடப்பாடு கொண்டிருக்க வேண்டும் என்று
மாமன்னர் வலியுறுத்தியுள்ளார்," என்று மாமன்னரின் அரண்மனை நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த திங்கட்கிழமையன்று திரு முகைதீன் யாசின் பிரதமர் பதவியிலிருந்து விலகியதும் மாமன்னரிடம் திரு இஸ்மாயிலின் பெயர் பரிந்துரைக்கப்பட்டது. திரு முகைதீன் 18 மாதங்களுக்குப் பிரதமராகப் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
114 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 61 வயது திரு இஸ்மாயிலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
அவர்களில் பலர் திரு முகைதீனின் பெர்சத்து கட்சி, பாஸ் கட்சி, சரவாக் கபுங்கான் கட்சி, அம்னோ ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பி னர்கள்.
திரு இஸ்மாயில் பிரதமராவதைத் தடுக்க கடைசி நேரத்தில் எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு எதிராக அவர் நடைமுறைப்படுத்திய திட்டங்கள் திருப்திகரமானதல்ல என்றும் அதனால் கொவிட்-19 பாதிப்பு மோசமடடைந்திருக்கிறது என்றும் அதிருப்திக் குரல்கள் எழுந்தன. அவர் பிரதமராக நியமிக்கப்படக்கூடாது என்று கோரிக்கை விடுக்கும் மனுவில் 333,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டனயர்.

