திடீர் வெள்ளம்: இடுப்பளவு நீரில் ஐவர் மீட்பு

திடீர் வெள்ளம்: இடுப்பளவு நீரில் ஐவர் மீட்பு

1 mins read
fa5f02e8-b55b-400e-a89b-d360c57ca047
பாசிர் ரிஸ் டிரைவ் 12க்கும் தெம்பனிஸ் அவென்யூ 10க்கும் இடையிலான சாலைச் சந்திப்பில், வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட வாகனங்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

கன­மழை கார­ண­மாக பாசிர் ரிஸ் டிரைவ் 12க்கும் தெம்­ப­னிஸ் அவென்யூ 10க்கும் இடையிலான சாலைச் சந்­திப்­பில் நேற்று காலை திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது.

இடுப்­ப­ளவு வரை வெள்­ளம் உயர்ந்­த­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இதைச் சிறி­தும் எதிர்­பார்க்­கா­மல் அவ்­வ­ழி­யா­கச் சென்­று­கொண்­டி­ருந்த கிட்­டத்­தட்ட 13 வாக­னங்­கள் வெள்­ளத்­தில் சிக்­கின. சம்­பவ இடத்­துக்கு விரைந்த குடி­மைத் தற்­காப்­புப் படை­யி­னர் வாக­னங்­க­ளி­லி­ருந்து வெளியே வர முடி­யா­மல் மாட்­டிக்­கொண்ட ஐவரை மீட்­ட­னர்.

ஒரு­வ­ருக்­குக் காலில் வலி ஏற்­பட்­ட­தா­க­வும் அவர் சாங்கி பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­ப­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.