உட்லண்ட்ஸ் வட்டாரத்தில் உள்ள நார்த் கோஸ்ட் வெளிநாட்டு ஊழியர்கள் விடுதியில் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட 62 பேரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
வழக்கமாக நடத்தப்படும் கொவிட்-19 பரிசோதனை மூலம் மூன்று பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது முதலில் தெரியவந்தது. அதே சமயத்தில் விடுதி யிலிருந்து வெளியான கழிவுநீரைச் சோதித்துப் பார்த்தபோதும் அங்கு தங்குபவர்களுக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தாக அமைச்சு கூறியது. அதையடுத்து அங்கு தங்கு
பவர்களுக்குப் பரிசோதனை நடத்தப்பட்டது.
அதன்மூலம் மேலும் 59
பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.
பாதிக்கப்பட்ட 62 பேரும் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் சிலருக்கு கொவிட்-19 கிருமித்தொற்றுக்கான அறிகுறிகள் இல்லை என்று அமைச்சு கூறியது.
எஞ்சியிருப்பவர்களுக்கு இலேசான சுவாசத் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததாக அறியப்
படுகிறது. பாதிக்கப்பட்டோர் அனைவரும் சுகாதாரப் பராமரிப்பு நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அங்கு அவர்களுக்குச் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அமைச்சு தெரிவித்தது.
நோய்வாய்ப்பட்டுள்ள 62
பேருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்
பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்த கட்டு
மானத் தளங்களில் கட்டட, கட்டுமான ஆணையம் வேலை நிறுத்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நார்த் கோஸ்ட் விடுதியில் தங்கும் அனைத்து ஊழியர்
களுக்கும் அடுத்த சில வாரங்
களுக்கு அடிக்கடி கொவிட்-19
பரிசோதனை நடத்தப்படும்.
இதுவரை 2,200 ஊழியர்
களுக்கு கொவிட்-19 பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் மேலும் 3,200 ஊழியர்களுக்கான பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாகவும்
சுகாதார அமைச்சு தெரிவித்தது.
கிருமிப் பரவலைத் தடுக்க விடுதியில் உள்ள அனைவருக்கு நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஊழியர்கள் தங்கள் அறையிலேயே 14 நாட்களுக்கு இருக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, அறையில் இருக்கும்போது அவர்கள் சமூக இடைவெளி விதிமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
விடுதியில் தங்கும் ஊழியர்
களுக்கு எவ்வாறு கிருமித்தொற்று ஏற்பட்டது என்பதை கண்டறிய விசாரணை நடத்தப்படுகிறது.
நேற்று 111 பேருக்குத் தொற்று
சிங்கப்பூரில் நேற்றைய நிலவரப்படி மேலும் 111 பேருக்குச் சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களில் 33 பேருக்கு ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில்லை. எஞ்சியுள்ள 78 பேர் ஏற்கெனவே பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என சுகாதார அமைச்சு தெரிவித்தது. இவர்களில் 24 பேர் நார்த் கோஸ்ட் விடுதி குழுமத்துடன் தொடர்புடையவர்கள்.
தனிமைப்படுத்தப்பட்ட 24 பேருக்குப் பரிசோதனை செய்தபோது அவர்களுக்குக் கிருமித்தொற்று இருப்பது தெரியவந்தது.

