'பேரழிவைத் தடுக்க மேலும் பலருக்கு இந்தியா தடுப்பூசி போட வேண்டும்'

'பேரழிவைத் தடுக்க மேலும் பலருக்கு இந்தியா தடுப்பூசி போட வேண்டும்'

1 mins read

தடுப்­பூசி போடும் விகி­தத்தை இந்­தியா உட­ன­டி­யாக அதி­க­ரிக்­கா­விட்­டால் ஒவ்­வொரு நாளும் புதி­தாக 600,000 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் உள்­ள­தாக அந்­நாட்­டின் தேசிய பேரி­டர் நிர்­வாக அமைப்பு நடத்­திய ஆய்வு தெரி­வித்­துள்­ளது.

முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு இந்­தி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு மோச­மான நிலையை எட்­டக்­கூ­டும் என்றும் மேலும் பலர் உயிரிழக்கக்கூடும் என்றும் அது கூறி­யது.

இந்­தி­யா­வில் வரும் அக்­டோ­பர் மாதத்­தில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை மள­ம­ள­வென அதி­க­ரித்து மூன்­றா­வது கொவிட்-19 அலை ஏற்­படும் ஆபத்து இருப்­ப­தாக அமைப்பு முன்­னு­ரைத்­துள்­ளது.

ஆனால், இந்­திய அர­சாங்­கம் நாளுக்கு 10 மில்­லி­யன் பேருக்­குத் தடுப்­பூசி போடும் திட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தி­னால் அன்­றா­டப் பாதிப்பு 200,000ஆகக் குறை­யும் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இரண்­டாம் கொவிட்-19 அலை­யின்­போது ஏற்­பட்ட மிக மோச­மான பாதிப்­பைத் தவிர்க்க மருத்­து­வ­

ம­னை­களில் போது­மான படுக்­கை­கள் இருப்­பதை உறுதி செய்ய வேண்­டும் என்று எளி­தில் பாதிப்

­ப­டை­யக்­கூ­டி­ய­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட வேண்­டும் என்­றும் அமைப்பு வலி­யு­றுத்­தி­யது. கடந்த மே மாதத்­தில் இந்­தி­யா­வில் கொவிட்-19 பாதிப்பு உச்­சத்­தைத் தொட்­டு 250,000க்கும் மேற்­பட்­டோர்

உயிரிழந்­த­னர்.