விடாது பெய்த மழையால் நேற்று காலை திடீர் வெள்ளம் ஏற்பட்டது. டன்னர்ன் சாலை, புக்கிட் தீமா சாலையில் உள்ள கால்வாயில்
நீர்மட்டம் மிக வேகமாக உயர்ந்து சாலைகளுக்குள் நீர் வழிந்தோடியது.
அதன் விளைவாக சைம் டார்பி நிலையத்துக்கும் பிஞ்சாய் பார்க்கிற்கும் இடைப்பட்ட டன்னர்ன் சாலை வெள்ளத்தில் மூழ்கியது.
அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு போக்குவரத்து முடங்கியது. டன்னர்ன் சாலை வழியாகச் சென்ற பேருந்துச் சேவைகள் பாதிக்கப்பட்டன. அப்பர் புக்கிட் தீமா சாலை, உட்லண்ட்ஸ் சாலைக்கும் கிராஞ்சி விரைவுச்சாலைக்கும் இடை
யிலான சாலைச் சந்திப்பு, சன்செட் டிரைவ், சன்செட் வே ஆகிய இடங்களிலும் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அவ்விடத்தைப் பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் பொதுப் பயனீட்டுக் கழகம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நேற்று எச்சரிக்கை விடுத்தது.
கனமழை காரணமாக அந்த இடங்களில் உள்ள சாக்கடை
களிலும் கால்வாய்களிலும் நீரின் அளவு 90 விழுக்காடு நிரம்பிவிட்டதாக அது தெரிவித்தது.

