பாராலிம்பிக்ஸ்: சிங்கப்பூருக்கு கிட்டிய முதல் பதக்கமே தங்கம்

பாராலிம்பிக்ஸ்: சிங்கப்பூருக்கு கிட்டிய முதல் பதக்கமே தங்கம்

1 mins read
4cf44bc5-905f-48f9-8fd2-5aff9ed44719
தங்கம் வென்ற யிப் பின் சியூ சிங்கப்பூர் கொடியைப் பற்றியவாறு தமது வெற்றியைக் கொண்டாடுகிறார். படம்: ஏஎஃப்பி -

ஜப்­பா­னி­யத் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் நடை­பெற்று வரும் உடற்­குறை உள்­ளோ­ருக்­கான ஒலிம்­பிக் விளை­யாட்­டுப் போட்­டி­களில் (பாரா­லிம்­பிக்ஸ்), சிங்­கப்­பூ­ருக்­குக் கிடைத்த முதல் பதக்­கமே தங்­க­மாக அமைந்து­விட்­டது.

100 மீட்­டர் மல்­லாந்த நீச்­சல் போட்­டி­யின் இறு­திச்­சுற்­றில் நேற்று முத­லா­வ­தாக வந்த யிப் பின் சியூ, 29, அப்­போட்­டி­யில் தங்­கப் பதக்­கம் வென்­றுள்­ளார்.

இறு­திச்­சுற்­றில் அவர் எடுத்­துக்­கொண்ட நேரம் 2 நிமி­டம் 16.61 வினா­டி­.

அவ­ருக்கு அடுத்­த­டுத்த நிலை­களில் ஜப்­பா­னின் மியூக்கி யமாடா (2:26.18), மெக்­சி­கோ­வின் ஃபபி­யோலா ரமி­ரேஸ் (2:36.54) ஆகி­யோர் வந்­த­னர்.

முன்­ன­தாக, தகு­திச்­சுற்­றில் முத­லி­டத்­தைப் பிடிக்க யிப் எடுத்­துக்­கொண்ட நேரம் 2 நிமி­டம் 14.46 வினா­டி­.

2016ல் பிரே­சி­லின் ரியோ டி ஜெனிரோ நக­ரில் நடை­பெற்ற பாரா­லிம்­பிக்ஸ் போட்­டி­களில், இதே 100 மீட்­டர் மல்­லாந்த நீச்­சல் போட்­டி­யில் யிப் உல­கச் சாதனை படைத்­தி­ருந்­தார். அப்­போது அவர் எடுத்­துக்­கொண்ட நேரம் 2 நிமி­டம் 7.09 வினா­டி­.

இதற்­கி­டையே, தொடக்­கமே தங்­கம் என்று கூறி பிர­த­மர் லீ சியன் லூங் தம் ஃபேஸ்புக் மூலம் யிப்­புக்கு வாழ்த்து கூறி­யி­ருந்­தார்.