மேலும் 120 பேருக்கு கொவிட்-19 தொற்று

மேலும் 120 பேருக்கு கொவிட்-19 தொற்று

2 mins read

சிங்­கப்­பூ­ரில் நேற்று பிற்­ப­கல் நில­வரப்­படி புதி­தாக 120 பேருக்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­தது.

உள்­ளூ­ரில் 118 பேருக்­குத் தொற்று உறு­தி­யா­னது. அவர்­களில் 29 பேருக்கு எப்­படி கிருமி தொற்­றி­யது என்­பது இன்­னும் கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை. எஞ்­சிய 89 பேர், முன்­ன­தாக கிருமி தொற்­றி­ய­வர்­களு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள்.

அவர்­களில் 26 பேர், உட்­லண்ட்­சில் உள்ள நார்த் கோஸ்ட் லாட்ஜ் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டுதி­யு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள். அவர்­களில் 25 பேர் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­னர்.

நார்த் கோஸ்ட் லாட்ஜ் விடு­தி­யில் உரு­வா­கி­யுள்ள கொவிட்-19 தொற்­றுக் குழு­மம், தற்­போது 112 பேரைக் கொண்­டுள்­ளது.

உள்­ளூ­ரில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளான எஞ்­சிய 92 பேரில் 19 பேர், முன்­ன­தாக கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள். அவர்­கள் ஏற்­கெ­னவே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­னர்.

முன்­ன­தாக கிருமி தொற்­றி­ய­வர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்த 44 பேரி­டம் கண்­கா­ணிப்­புப் பரி­சோ­தனை மூலம் தொற்று கண்­டறி­யப்­பட்­டது.

உள்­ளூ­ரில் கிருமி தொற்­றி­ய­வர்­களில் இரு­வர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத அல்­லது ஒரு­முறை மட்­டும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்ட 70 வய­துக்கு மேற்­பட்ட மூத்­தோர். அவர்­க­ளுக்­குக் கடு­மை­யான நோய்த்­தொற்று பாதிப்பு ஏற்­படும் அபா­யம் நில­வு­கிறது. இந்­நி­லை­யில், வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த இரண்டு பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­கள் இங்கு வந்­த­வு­டன் வீட்­டில் இருக்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூர் வந்­தி­றங்­கி­ய­போது அவர்­களில் ஒரு­வ­ருக்­குத் தொற்று கண்­ட­றி­யப்­பட்­டது. இங்கு வந்த பிறகு தங்­கு­மி­டத்­தில் கட்­டாய உத்­தரவை நிறை­வேற்றி வந்­த­போது மற்­றொ­ரு­வ­ருக்­குத் தொற்று கண்­டறி­யப்­பட்­டது. சிங்­கப்­பூ­ரில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் மொத்த எண்­ணிக்கை 66,812ஆக உயர்ந்­துள்­ளது.

கூடுதல் செய்தி - பக்கம் 2ல்