ஆய்வு: கொவிட்-19 தடுப்பூசியின் ஆற்றல் 6 மாதங்களுக்கு மட்டுமே

ஆய்வு: கொவிட்-19 தடுப்பூசியின் ஆற்றல் 6 மாதங்களுக்கு மட்டுமே

1 mins read

கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சி­கள் அளிக்­கும் பாது­காப்பு, ஆறு மாதங்­க­ளுக்கு மட்­டுமே நீடிக்­கும் தன்­மை­யு­டை­யவை என்று பிரிட்­டிஷ் ஆய்­வா­ளர்­கள் கூறு­கின்­ற­னர்.

'ஃபைசர்/பயோ­என்­டெக்', 'ஆக்ஸ்­ஃபோர்டு/ஆஸ்ட்­ர­ஸெ­னகா' ஆகி­ய தடுப்­பூ­சி­க­ளை­ இருமுறை போட்­டுக்­கொண்டு ஆறு மாதங்­களில் தடுப்­பூசி ஆற்­றல் குறை­வ­தாக அவர்­கள் தெரி­வித்­த­னர்.

இத­னால், மூன்­றா­வ­தாக ஒரு 'பூஸ்ட்­டர்' தடுப்­பூசி தேவைப்­படும் என்­றும் அவர்­கள் கூறு­கின்­ற­னர்.

ஐந்து, ஆறு மாதங்­களில் கொவிட்-19 தொற்­றைத் தடுக்­கும் 'ஃபைசரின் ஆற்­றல், 88 விழுக்­காட்­டி­லி­ருந்து 74 விழுக்­கா­டா­கக் குறைந்­து­வி­டு­வ­தாக பிரிட்­ட­னின் 'ஸோயி கொவிட்' ஆய்வு காட்­டி­ உள்­ளது. 1.2 மில்­லி­ய­னுக்கு மேற்­பட்ட பரி­சோ­தனை முடி­வு­க­ளி­லிருந்து பெறப்­பட்ட தரவை அடிப்­படை­யா­கக் கொண்டு இந்த ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டது.

கிரு­மித்­தொற்­றுச் சம்­ப­வங்­களும் தொற்று பர­வும் வாய்ப்­பும் அதி­க­மாக உள்ள நிலை­யில் தடுப்­பூ­சி­யால் பாது­காப்பு கிடைத்­து­விட்­டது எனப் பொறுத்­தி­ருக்­கா­மல் ஏதே­னும் செய்­தாக வேண்­டும் என்று பிபிசி தொலைக்­காட்­சி­யி­டம் ஆய்வை மேற்­கொண்ட பேரா­சி­ரி­யர் டிம் ஸ்பெக்­டர் கூறி­னார்.