குத்தகையாளர் நொடிந்துபோனதால் ஐந்து பிடிஓ திட்டங்களில் தாமதம்

குத்தகையாளர் நொடிந்துபோனதால் ஐந்து பிடிஓ திட்டங்களில் தாமதம்

1 mins read
561c7da8-7352-4ca7-a189-89d5ae849a57
-

புக்கிட் பாத்தோக், கிளமெண்டி, புக்கிட் பாஞ்சாங், உட்லண்ட்ஸ் ஆகிய ஐந்து புதிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக பிடிஓ (தேவைக்கு ஏற்ப கட்டித்தரப்படும் வீடுகள்) திட்டங்களில் வீடு வாங்குபவர்கள், அதிக காலம் காத்திருக்க வேண்டியுள்ளது. இந்தத் திட்டங்களுக்கான முக்கிய குத்தகையாளர் நொடித்துப் போனது இதற்குக் காரணம் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் அறிந்தது.

ஸ்கைவிஸ்தா அட் புக்கிட் பாத்தோக், புக்கிட் பாஞ்சாங்கிலுள்ள செஞ்சா ஹைட்ஸ், செஞ்சா ரிட்ஜஸ் மற்றும் உட்லண்ட்சிலுள்ள மார்சிலிங் குரோவ் ஆகியவை அந்தக் கட்டடங்கள். கிளமெண்டி வட்டாரத்தில் வெஸ் கோஸ்ட் பார்க்கிற்கு எதிரேயுள்ள கடைசி இடத்திற்கு வெஸ்ட் கோஸ்ட் லிங்க் (சைட் பி) என்று பெயர். .

கிரேட்எர்த் கார்பரேஷன் என்ற குத்தகையாளருக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி பிரச்சினையை வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் தெரிவித்தது. அந்தத் திட்டங்களை தன்னால் நிறைவேற்ற முடியவில்லை என அந்நிறுவனம் உறுதி செய்ததாக வீவக கூறியுள்ளது.