ஐந்து ‘பிடிஓ’ திட்டங்கள் மேலும் தாமதமாகலாம்

புக்­கிட் பாத்­தோக், கிள­மெண்டி, புக்­கிட் பாஞ்­சாங், உட்­லண்ட்ஸ் ஆகிய வட்­டா­ரங்­களில் தேவைக்­கேற்ப கட்­டித் தரப்­படும் (பிடிஓ) ஐந்து வீட­மைப்­புத் திட்­டங்­க­ளின் கட்­டு­மா­னப் பணி­கள் நிறை­வடைய மேலும் தாம­த­மா­க­லாம். அந்­தக் கட்­டு­மா­னத் திட்­டங்­களின் முக்­கிய ஒப்­பந்­த­தா­ரர் நொடித்­துப்­போ­னதே இதற்­குக் கார­ணம்.

'ஸ்கை விஸ்டா அட் புக்­கிட் பாத்­தோக்', புக்­கிட் பாஞ்­சாங்­கில் 'செஞ்சா ஹைட்ஸ்', 'செஞ்சா ரிட்­ஜஸ்', உட்­லண்­ட்சில் 'மார்­சி­லிங் குரோவ்,' கிள­மெண்­டி­யில் 'வெஸ்ட் கோஸ்ட் பார்க்­வியூ' ஆகி­ய­வையே பாதிக்­கப்­பட்­டுள்ள அந்த ஐந்து 'பிடிஓ' திட்­டங்­கள். இந்த ஐந்து திட்­டங்­களில் மொத்­தம் 2,982 வீடு­கள் அமை­கின்­றன.

'கிரேட்­எர்த் கார்ப்­ப­ரே­ஷன்', 'கிரேட்­எர்த் கன்ஸ்ட்­ரக்­‌ஷன்' என்ற அத்­திட்­டங்­க­ளின் முக்­கிய ஒப்­பந்­த­தா­ரர்­கள் நிதிப் பிரச்­சினை­யில் சிக்­கி­யி­ருப்­ப­தால், கட்­டு­மா­னப் பணி­கள் தாம­த­மா­க­லாம் என்று அந்த வீடு­களை வாங்­கு­வோ­ரி­டம் வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கம் நேற்று முன்­தினம் தெரி­வித்­து­விட்­டது.

எவ்­வ­ளவு காலம் தாம­த­மா­கும் எனக் கூறப்­ப­ட­வில்லை. இருப்­பினும், புதிய ஒப்­பந்­த­தா­ரர்­கள் நிய­மிக்­கப்­பட்டு, மீண்­டும் கட்­டு­மா­னப் பணி­கள் தொடங்­கி­ய­தும் அது­கு­றித்து வீடு வாங்­கு­வோ­ரி­டம் தக­வல் தெரி­விக்­கப்­படும் என்று வீவக கூறி­யி­ருக்­கிறது.

அர­சாங்­கத்­தின் உதவி கிட்­டி­ய­போ­தும், அந்த ஐந்து வீட­மைப்­புத் திட்­டங்­க­ளைத் தன்­னால் முடிக்க இய­லாது என்று கிரேட்­எர்த் நிறு­வ­னம் சென்ற வாரம் தெரி­வித்­து­விட்­ட­தாக கழகத்தின் அறிக்­கை­யில் கூறப்­பட்­டுள்­ளது.

முன்­கூட்­டியே பணம் வழங்­கு­வது போன்ற சாத்­தி­ய­முள்ள தெரி­வு­கள் மூல­மாக கிரேட்­எர்த் நிறு­வ­னத்­திற்கு உத­வும் வழி­களைத் தான் ஆராய்ந்­த­தாக கழ­கம் தெரி­வித்­தது. ஆயி­னும், செயல்­பா­டு­க­ளைத் தொட­ரும் அள­விற்கு கிரேட்­எர்த் நிறு­வ­னத்­தின் நிதி நிலைமை இல்லை என்­றும் அது குறிப்­பிட்­டது.

இம்­மா­தம் 20ஆம் தேதி­யில் இருந்து அந்த ஐந்து கட்டுமானத் தளங்களிலும் பணி­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

எஞ்­சியிருக்கும் பணி­களை நிறைவு­செய்ய முடிந்­த­ளவு விரை­வில் புதிய ஒப்­பந்­த­தா­ரர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வர் என்று கழ­கம் கூறி இருக்கிறது.

அந்த ஐந்து வீட­மைப்­புத் தளங்­களில் துப்­பு­ர­வுப் பணி­க­ளை­யும் பூச்­சிக் கட்­டுப்­பாட்­டுப் பணி­க­ளை­யும் மேற்­கொள்­வ­தற்­குத் தற்­கா­லிக ஒப்­பந்­த­தா­ரர்­கள் பணி­ய­மர்த்­தப்­ப­டு­வர்.

மொத்­தம் 230 வீடு­க­ளைக் கொண்­டுள்ள செஞ்சா ரிட்­ஜஸ் வீட­மைப்­புத் திட்­டப் பணி­கள் இவ்­வாண்­டின் இறு­திக் காலாண்­டி­லும் 552 வீடு­க­ளைக் கொண்­டுள்ள செஞ்சா ஹைட்ஸ் திட்­டப் பணி­கள் அடுத்த ஆண்­டின் முதல் காலாண்­டி­லும் நிறை­வு­பெறு­வ­தாக இருந்­தன.

ஸ்கை விஸ்டா அட் புக்­கிட் பாத்­தோக் திட்­டத்­தில் 257 வீடு­கள் அமை­கின்­றன. அதற்­கான பணி­கள் அடுத்த ஆண்­டின் மூன்­றாம் காலாண்­டில் முடி­வ­டை­வ­தாக இருந்­தன.

அதே­போல, 1,246 வீடு­கள் அமை­யும் மார்­சி­லிங் குரோவ் திட்­டத்­திற்­கான பணி­கள் 2022 கடை­சிக் காலாண்­டி­லும் 697 வீடு­க­ளைக் கொண்ட வெஸ்ட் கோஸ்ட் பார்க்­வியூ திட்­டப் பணி­கள் 2023 இரண்­டாம் காலாண்­டி­லும் நிறை­வ­டை­வ­தாக இருந்­தன.

இத­னி­டையே, கொவிட்-19 பர­வல் கார­ண­மாக மனி­த­வ­ளத்­தி­லும் விநி­யோ­கத்­தி­லும் ஏற்­பட்ட இடை­யூ­று­க­ளால், இந்த ஐந்து திட்­டங்­க­ளின் கட்­டு­மா­னப் பணி­கள் முடி­வ­டை­யும் தேதி ஏற்­கெ­னவே தள்­ளி­வைக்­கப்­பட்­டு­விட்­டது.

"இந்­தத் தாம­தங்­கள், வீடு வாங்­கு­வோ­ரைப் பாதிக்­கும்; அவர்­க­ளின் வாழ்க்­கைத் திட்­டங்­க­ளைச் சீர்­கு­லைக்­கும். இந்­நி­லை­யில், அண்­மைய நிகழ்­வா­லும் அவர்­கள் ஏமாற்­ற­ம­டை­வர்," என்று வீவக தனது அறிக்­கை­யில் கூறி­யுள்­ளது.

கால தாம­தத்­தைக் குறைக்­க­வும் அதே வேளை­யில் பாது­காப்­பும் தர­மும் பாதிக்­கப்­ப­டா­மல் இருப்­பதை உறு­திப்­ப­டுத்­த­வும் மாற்று ஒப்­பந்­த­தா­ரர்­களை விரை­வில் நிய­மிக்க நட­வடிக்கை எடுக்­கப்­படும் என்­றும் கழகம் தெரி­வித்து இருக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!