தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் - நாளை திறப்பு

தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில் - நாளை திறப்பு

1 mins read
93276ba3-a5cf-4e7b-a77e-cfa92f0fa802
-

தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதை நாளை சனிக்கிழமை (ஆகஸ்ட் 28ஆம் தேதி) திறக்கவுள்ளது. ரயில்கள் உச்ச நேரங்களில் ஒவ்வொரு ஐந்து நிமிடங்களுக்கும் மற்ற நேரங்களில் ஒவ்வொரு ஒன்பது நிமிடங்களுக்கும் கடந்து செல்லும்.

இந்தப் பாதையில் தற்போது உச்ச நேரங்களில் பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை ஒரு ரயில் செயல்படுகின்றது. மற்ற நேரங்களில் 15 நிமிடங்களுக்கு ஒருமுறை ரயில் செல்கிறது.

ஸ்ப்ரிங்லீப், லெண்டோர், மேபிளவர், பிரைட் ஹில் ஆகிய நிலையங்கள் இந்த ரயில் பாதையில் இடம்பெறுகிறது. உட்லண்ட்ஸ் நார்த், உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சவுத் ஆகிய மூன்று ரயில் நிலையங்களும் இதில் உள்ளன.

இனி, ரயில் பாதையின் இரண்டாம் கட்டத்தில் இரண்டு முனையங்கள் இருக்கும். கெல்டிகாட் நிலையம், புதிய ரயில் பாதைக்கும் வட்ட ரயில் பாதைக்கும் இடையே முனையமாக இயங்கும். வருங்காலத்தில் அமைக்கப்படவுள்ள குறுக்கு ரயில் பாதைக்கு முனையமாகத் திகழவுள்ளது தாம்சன் ஈஸ்ட் கோஸ்ட் ரயில்பாதையின் இரண்டாவது முனையமான பிரைட் ஹில்.

பாதையின் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிரமத்தைப் பொறுத்திருந்த வட்டாரவாசிகளுக்கு போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரன் நன்றி தெரிவித்தார்.