சிங்கப்பூரில் ஆகஸ்ட் 30 முதல் சினோஃபார்ம் கொவிட்-19 தடுப்பூசி

சிங்கப்பூரில் ஆகஸ்ட் 30 முதல் சினோஃபார்ம் கொவிட்-19 தடுப்பூசி

1 mins read
2acc9c50-aa0f-4d31-8dba-c84817cc4cf0
படம்: ராய்ட்டர்ஸ் -

சிங்கப்பூரில் சில மருத்துவமனைகளிலும் மருந்தகங்களிலும் கொவிட்-19க்கு எதிரான சினோஃபார்ம் தடுப்பூசி நாளை மறுதினம் (ஆகஸ்ட் 30) முதல் கிடைக்கும். தஞ்சோங் பகார் பிளாசாவில் இருக்கும் கிளியர்பிரிட்ஜ் ஹெல்த் சுகாதாரப் பராமரிப்பு நிறுவனத்தின் மெடிக் சர்ஜிக்கல் அண்ட் லேசர் கிளினிக் என்ற மருந்தகத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் முன்பதிவு செய்துகொள்ளலாம். அந்த மருந்தகத்தில் நாளை மறுதினம் முதல் தடுப்பூசி போடப்படும்.

அங்கு இருமுறை தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான கட்டணம் ஜிஎஸ்டி உட்பட $98.

கிளெனிகல்ஸ் மருத்துவமனை, மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, ஒன் ராஃபிள்ஸ் கீ மற்றும் டக்ஸ்டன் வட்டாரங்களில் உள்ள ஷெண்டன் மெடிக்கல் குழும மருந்தகங்களில் சினோஃபார்ம் தடுப்பூசியை வழங்கும் ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர் நிறுவனம், நாளை மறுதினம் முன்பதிவுகளைத் தொடங்கும்.

கிளெனிகல்ஸ் மருத்துவமனையிலும் ஷெண்டன் மெடிக்கல் மருந்தகங்களிலும் வரும் புதன்கிழமையிலிருந்து தடுப்பூசி கிடைக்கும். மவுண்ட் எலிசபெத் மருத்துவமனை, செப்டம்பர் 7 முதல் தடுப்பூசி போடுவதைத் தொடங்கும்.

ஐஎச்எச் ஹெல்த்கேர் சிங்கப்பூர் நிறுவனம், ஜிஎஸ்டி உட்பட $99 கட்டணத்திற்கு தடுப்பூசியை வழங்குகிறது.