எல்லா இனத்தவர்க்கும் சம உரிமை

எல்லா இனத்தவர்க்கும் சம உரிமை

4 mins read
bc4fa196-ed42-40ff-825f-c8b9c28d8e9d
-

தேசிய தினப் பேரணி உரையில் பிரதமர் லீ உறுதி

இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் இயற்றப்படும்; குறைந்த வருமானம் ஈட்டுவோர்க்குக் கூடுதல் ஆதரவு

சிங்­கப்­பூ­ரில் எந்தவோர் இனத்­திற்­கும் சிறப்­பு­ரி­மை­கள் இல்லை என்­றும் எல்லா இனங்­களும் சம­மாக நடத்­தப்­ப­டு­கின்­றன என்­றும் பிர­தமர் லீ சியன் லூங் தெரி­வித்­துள்­ளார்.

கடின முயற்­சி­யால் எட்­டப்­பட்ட இன நல்­லி­ணக்­கத்தை வளர்ப்­ப­தும் எவர் ஒரு­வ­ரும் பின்­தங்­கி­வி­டாத பொரு­ளி­யல் வளர்ச்­சியை உறு­தி­செய்­வ­தும் பிர­த­ம­ரின் 16வது தேசிய தினப் பேரணி உரை­யின் முக்­கி­யக் கருப்­பொ­ருள்­க­ளாக விளங்­கின.

கடந்த ஆண்டு தேசிய தினப் பேரணி உரை இடம்­பெ­றாத நிலை­யில், இம்­முறை 'மீடி­யா­கார்ப்'பில் நேர­டி­யா­க­வும் 'ஸும்' வழி­யாக மெய் ­நி­கர் முறை­யி­லும் இடம்­பெற்­றது.

ஆர்ச்­சர்ட் சாலை­யில் கலப்­பினத் தம்­ப­தி­ய­ரைப் பல­து­றைத் தொழில்­கல்­லூரி விரி­வு­ரை­யா­ளர் ஒரு­வர் இடை­ம­றித்து இனம் சார்ந்து வாதிட்­டது உள்­ளிட்ட சில இன­வாத நிகழ்­வு­க­ளைப் பிர­த­மர் குறிப்­பிட்­டார்.

குறிப்­பாக, அவற்­றுள் பல சம்­பவங்­கள் இந்­தி­யர்­க­ளைக் குறி­வைத்து நிகழ்த்­தப்­பட்­டதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். வேலை அனு­மதி அட்டை பெற்ற இந்­திய ஊழி­யர்­கள் அதி­க­ள­வில் இருப்­பது அல்­லது உரு­மா­றிய 'டெல்டா' கொவிட்-19 கிருமி முதன்­மு­த­லில் இந்­தி­யா­வில் உரு­வெ­டுத்­தது அதற்­குக் கார­ண­மாக இருக்­க­லாம் எனக் கூறப்­பட்­டது.

"உரு­மா­றிய 'ஆல்ஃபா' கிரு­மிக்­காக பிரிட்­டிஷ்­கா­ரர்­களை, 'கேடிவி' தொற்­றுக் குழு­மத்­திற்­காக வியட்­னா­மி­யர்­களை அல்­லது முதன்­மு­த­லில் வூஹா­னில் கொரோனா கிருமி தலை­யெ­டுத்­த­தற்­கா­கச் சீனர்­களை எப்­ப­டிக் குற்­றம் சொல்ல முடி­யாதோ, அது­போல இந்­தி­யர்­க­ளைச் சாடு­வது நியா­ய­மற்­றது," என்று பிர­த­மர் சொன்­னார். நமக்கு ஏற்­படும் விரக்­தி­, இன நல்­லி­ணக்­கத்­தைப் பாதிக்க அனு­ம­தித்­து­விடக்­கூ­டாது என்­றார் பிரதமர்.

இத­னை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரில் பல இன மக்­க­ளி­டையே சகிப்­புத்­தன்­மையை ஊக்­கு­விப்­ப­தற்­காக இன நல்­லி­ணக்­கப் பரா­ம­ரிப்­புச் சட்­டத்தை அர­சாங்­கம் இயற்­றும் என்று பிர­த­மர் லீ தெரி­வித்­தார்.

இன­வா­தக் குற்­றங்­க­ளுக்­கான தண்­ட­னை­க­ளு­டன், அக்­குற்­றத்­தில் ஈடு­படும் ஒரு­வர், மற்ற இனங்­கள் குறித்து அறிந்து, நல்­லு­றவை ஏற்­படுத்­திக்­கொள்­ளும் மென்­மை­யான அணு­கு­மு­றை­க­ளை­யும் அச்­சட்­டம் கொண்­டி­ருக்­கும்.

குறைந்த வரு­மான ஊழி­யர்­களின் வரு­மா­னத்தை உயர்த்தி, அவர்­க­ளுக்­குக் கூடு­தல் ஆத­ர­வு அளிப்­பது குறித்­தும் பிர­த­மர் பேசி­னார். கொவிட்-19 பர­வல் கால­கட்­டத்­தில் குறைந்த வரு­மான ஊழி­யர்­கள் பலர், துப்­பு­ரவு, உணவு விநி­யோ­கம், பாது­கா­வல் என முன்­க­ளத்­தில் பணி­யாற்­றி­னர். ஆயினும், குறை­வான சேமிப்பு, வேலை­யி­லி­ருந்து நீக்­கப்­பட அதிக வாய்ப்பு என்று ஆபத்­தான சூழ­லிலும் அவர்­கள் இருந்­த­னர்.

இதற்­குத் தீர்­வு­கா­ணும் வித­மாக, அதி­க­மான ஊழி­யர்­கள் பய­ன­டை­யும் வகை­யில் படிப்­ப­டி­யான சம்­பள உயர்வு முறையை அர­சாங்­கம் விரி­வு­ப­டுத்­த­வுள்­ளது.

"அடுத்த ஆண்­டில் சில்­லறை விற்­பனை, அதன்­பின் உணவு சேவை­கள், கழிவு மேலாண்மை என மேலும் பல துறை­கள் படிப்­படி­யான சம்­பள உயர்வு முறை­யின்­கீழ் வரும்," என்று திரு லீ தெரி­வித்­தார்.

விநி­யோக ஊழி­யர்­கள், அது­போன்ற பணி­களில் இருப்­போ­ரின் பாது­காப்பை வலுப்­ப­டுத்­தும் வழி­கள் குறித்­தும் அர­சாங்­கம் ஆராய்ந்து வரு­கின்­றது.

வெளி­நாட்டு ஊழி­யர்­களை வேலைக்கு எடுக்­கும் நிறு­வ­னங்­கள், தங்­க­ளி­டம் பணி­பு­ரி­யும் உள்­ளூர்­வா­சி­கள் அனை­வர்க்­கும் குறைந்­த­பட்­சம் உள்­ளூர் தகுதி ஊதி­யத்தை வழங்க வேண்­டி­யி­ருக்­கும்.

வேலை அனு­மதி அட்டை வைத்­துள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­கள் கார­ண­மாக, நடுத்­தர வரு­மான சிங்­கப்­பூ­ரர்­கள் வேலை தொடர்­பில் கவ­லைப்­பட்­ட­தாக திரு லீ கூறி­னார்.

கொரோனா பர­வல் ஏற்­ப­டுத்­திய நிச்­ச­ய­மில்­லாப் பொரு­ளி­யல் சூழ­லால் நடுத்­தர வரு­மா­னம் ஈட்­டும் சிங்­கப்­பூ­ரர்­கள் அதிக நெருக்­கடியை உணர்­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இத­னை­ய­டுத்து, சிங்­கப்­பூ­ரில் வேலை­செய்ய விரும்­பும் வெளி­நாட்­ட­வர்­கள் தகு­தி­யா­ன­வர்­க­ளாக இருப்­பதை உறு­தி­செய்ய, எஸ்-பாஸ், எம்­பி­ளாய்­மண்ட் பாஸ் ஊழி­யர்­க­ளுக்­கான ஊதிய வரம்பு அதி­க­ரிக்­கப்­பட்டு, தகுதி நிபந்­தனை­கள் கடு­மை­யாக்­கப்­ப­டு­வது தொட­ரும்.

வழி­காட்டி நடை­மு­றை­க­ளைச் சட்­ட­மாக்­கும் வகை­யில் நியா­ய­மான வேலை நடை­மு­றை­க­ளுக்­கான முத்­த­ரப்­புக் கூட்­ட­ணிக்­குக் கூடு­தல் அதி­கா­ரம் வழங்­கப்­படும். வேலை­யி­டப் பாகு­பாட்டை எதிர்­கொள்ள ஒரு தீர்ப்­பா­யம் உரு­வாக்­கப்­படும்.

இவ்­வாண்டு நவம்­பர் மாதத்­தில் இருந்து, பொதுச் சுகா­தா­ரப் பரா­மரிப்­புத் துறை­யில் பணி­பு­ரி­யும் முஸ்­லிம் தாதி­யர், தாங்­கள் விரும்பினால் தலை­யங்கி அணிந்து வேலை செய்ய அனு­ம­திக்­கப்­படுவர்.

தொடர்­பு­க­ளின் தட­ம­றி­வோர், அவ­சர மருத்­துவ வாகன ஓட்­டு­நர்­கள், தடுப்­பூசி நிலைய ஊழி­யர்­கள் போன்ற, கொவிட்-19 தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்த உத­விய முன்­க­ளப் பணி­யா­ளர்­க­ளுக்­குப் பிர­த­மர் லீ புக­ழா­ரம் சூட்­டி­னார்.

"இயல்­பான நேரங்­களில், சிங்­கப்­பூ­ரர்­க­ள் எவ்­வ­ளவு வலி­மை­யா­ன­வர்­கள் என்­பதை உண­ராமல்­இருக்கலாம். ஆனால் இப்­போது, ஒரு தலை­முறை நெருக்­க­டி­யின்­போது, நம்­மால் என்ன செய்ய முடி­யும் என்­பதை நமக்­கும் இவ்­வு­ல­கிற்­கும் காட்­டி­யுள்­ளோம். அவர்­கள் அறி­யப்­ப­டாத நாய­கர்­கள், அது நாம்­தான்!" என்றார் பிரதமர்.

பிரதமர் உரையின் சிறப்பம்சங்கள்

♦ புதிய வளர்ச்சி, வேலைகள், வளப்பத்தை உருவாக்குதல்.

♦ குறைந்த வருமான ஊழியர்களுக்குக் கூடுதல் ஆதரவு.

♦ விநியோக ஊழியர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மனிதவள அமைச்சு ஆராயும்.

♦ வேலையிடங்களில் நியாயமாக நடத்தப் படுவதை உறுதிசெய்ய, முத்தரப்புக் கூட்டணியின் வழிகாட்டி நெறிமுறைகள் சட்டமாக்கப்படும்

♦ இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த இன நல்லிணக்கப் பராமரிப்புச் சட்டம் இயற்றப்படும்

♦ எந்த இனத்திற்கும் சிறப்புரிமை கிடையாது, எல்லா இனத்தவரும் சமமாக நடத்தப்படுவர்.

♦ வரும் நவம்பர் மாதம் முதல் பொதுச் சுகாதாரப் பராமரிப்புத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் தாதியர் தலையங்கி அணியலாம்.