என்று தணியும் எங்களின் ஏக்கம்

என்று தணியும் எங்களின் ஏக்கம்

1 mins read
11aec79d-4f31-4f9f-9e7d-66a32c8988ad
-

உறவினர்கள் சிங்கப்பூரிலேயே இருக்கும்போதும் கொவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக நீண்டகாலமாக நேரில் சந்தித்து, அளவளாவ முடியாத நிலை! சொந்த நாட்டில் இருக்கும் குடும்பத்தினரைக் காண ஆவலாக இருந்தாலும், தாய்நாடு சென்றபின் மீண்டும் சிங்கப்பூர் திரும்ப முடியாமல் போய்விடுமோ என்ற கவலை! நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் நடப்பில் இருந்தபோது சில மாதங்களாகத் தங்குவிடுதியிலேயே அடை பட்டுக் கிடந்த நிலையில், விடுதிகளில் வசிக்கும் வெளி நாட்டு ஊழியர்கள் இப்போது வேலைக்குச் செல்ல மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சமூகத்திற்குத் திரும்ப அனுமதிக்கும் திட்டம் இன்னும் நிலுவையிலேயே இருக்கிறது. தாங்களும் கொவிட்-19 தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ள நிலையில், தாய்நாட்டிற்குச் சென்று உறவுகளைக் கண்டு மகிழும், சமூகத்திற்குத் திரும்பி நண்பர்களைச் சந்தித்து இன்புறும் நாளையும் எண்ணி காத்திருக்கின்றனர் வெளிநாட்டு ஊழியர்கள். விரிவான செய்திகளுக்கு www.tamilmurasu.com.sg.