காபூல் விமான நிலையம் மீது எறிபடைத் தாக்குதல்கள்

காபூ­லின் விமான நிலை­யத்­தைக் குறி­வைத்து எறிபடை (ராக்­கெட்) தாக்­கு­தல்­கள் நேற்று நடத்­தப்­பட்­டன. ஆப்­கா­னிஸ்­தா­னி­லி­ருந்து அமெ­ரிக்­கத் துருப்­பு­கள் விரைந்து வெளி­யேறி வரு­கின்­றன. 'ஐஎஸ்' அமைப்­பின் தாக்­கு­தல்­க­ளுக்கு ஆளா­கக்­கூ­டி­ய­வர்­க­ளை­யும் துருப்பு­கள் வெளி­யேற்ற உதவி வரு­கின்­றன. இதற்­கி­டையே, இத்­தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­டன.

ஆப்­கா­னிஸ்­தானை விட்டு அனைத்து அமெ­ரிக்­கத் துருப்­பு­களை­யும் மீட்­ப­தற்கு அமெ­ரிக்க அதி­பர் ஜோ பைடன் குறித்­துள்ள இறுதி நாள் இன்று. தலி­பான் இயக்­கம் மீண்­டும் ஆட்­சியை இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் கைப்­பற்­றி­யதை அடுத்து, ஆப்­கான் மக்­கள் பீதி­யில் அமெ­ரிக்க விமா­னங்­கள் வழி நாட்டை விட்டு வெளி­யேற முயன்று வரு­கின்­ற­னர்.

காபூல் விமான நிலை­யத்­தி­லி­ருந்து 120,000க்கும் மேற்­பட்­டோரை வெளி­யேற்ற உதவி வரும் இந்த விமா­னச் சேவை­கள் இன்­றோடு முடிந்­து­வி­டும். அதற்­குள் எஞ்­சிய அமெ­ரிக்­கத் துருப்­பு­களும் கிளம்பி­விட வேண்­டும் என்­பது இலக்கு. இந்­நி­லை­யில் தங்­க­ளை­யும் அமெ­ரிக்க அர­சத்­தந்­தி­ரி­க­ளை­யும் வெளி­யேற்­று­வ­தில் தற்­போது அமெ­ரிக்­கத் துருப்­பு­கள் கவ­னம் செலுத்தி வரு­கின்­றன. இதற்­கி­டையே மீட்­கும் பணிக்கு ஆகப் பெரிய மிரட்­டலை, தலி­பா­னுக்கு எதி­ராக இயங்கி வரும் 'ஐஎஸ்' அமைப்பு விடுத்து வரு­கிறது.

மேலும் அதிக தாக்­கு­தல்­கள் தொட­ரக்­கூ­டும் என்று திரு பைடன் எச்­ச­ரித்­ததை அடுத்து, நேற்று முன்­தி­னம் இரவு 'ஐஎஸ்' அமைப்­பால் தயா­ரிக்­கப்­பட்ட கார் வெடி­குண்டு மீது அமெ­ரிக்கா, விமா­னத் தாக்கு­தல் ஒன்றை நடத்­தி­யது. அதை­ அ­டுத்து, நேற்று காலை விமான நிலை­யம் மீது ராக்­கெட் தாக்­கு­தல்­கள் நடத்­தப்­பட்­டன. விமான நிலை­யத்­தைக் குறி­வைத்து ராக்­கெட் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டதை அமெ­ரிக்க அதி­பர் மாளிகை பின்­னர் உறு­திப்­ப­டுத்­தி­யது. இருப்­பினும், அங்­குள்ள செயல்­பா­டு­கள் எது­வும் தடைப்­ப­ட­வில்லை என்­றும் அது தெரி­வித்­தது.

ஐந்து முறை­யா­வது ராக்­கெட் தாக்­கு­தல் நடந்­தி­ருக்­கும் என்று தாம் நம்­பு­வ­தாக தலி­பான் அதி­காரி ஒரு­வர் தெரி­வித்­தார். இருப்­பி­னும், அனைத்­தை­யும் விமான நிலை­யத்­தின் எரி­ப­டைத் தற்­காப்பு அமைப்­பு­முறை முறி­ய­டித்­து­விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!