தீவில் இந்த வாரம் இரண்டாவது நாளாக தொடர் கனமழை வருகிறது. வெள்ளங்கள் திடீரென ஏற்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாக பொதுப்பயனீட்டுக் கழகம் தெரிவித்துள்ளது.
தேசிய சுற்றுப்புற அமைப்பின் கீழ் இயங்கும் சிங்கப்பூர் வானிலை ஆய்வகம் சிங்கப்பூர் வானிலை ஆய்வகம், இன்று செவ்வாய்க்கிழமை கனத்த மழை தொடர்பிலான உத்தரவை வெளியிட்டது. சிங்கப்பூரின் மத்திய, மேற்கு பகுதிகளில் நடுத்தர அளவிலான மழை அல்லது கனத்த மழை பெய்யக்கூடும் என்றும் என்றும் கிழக்குப் பகுதியில் கனத்த மழை பெய்யக்கூடும் என்றும் ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.
காலை 8.20 மணிக்கு, காமன்வெல்த் லேன் மற்றும் காமன்வெல்த் டிரைவில் நீர்நிலைகள் அதிகமாக இருப்பதாகவும் அப்பகுதிகளில் காலை மணி 8.20 அளவில் அப்பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான அபாயம் அதிகமாக இருப்பதாகவும் பொதுப் பயனீட்டுக் கழகம் தெரிவித்தது.
இன்று பதிவான ஆகக் குறைந்த வெப்பநிலையான 23.8 டிகிரி செயல்சியஸ். நொவீனாவில் இது காலை 8 மணிக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

