கொவிட்-19 கிருமிப் பரவல் அதிகரிப்பால் சிரமப்படும் ஆஸ்திரேலியாவுக்கு சிங்கப்பூர் தடுப்பூசி கொடுத்து உதவுகிறது.
தடுப்பூசி மருந்து பகிர்வுத் திட்டத்தின்கீழ், 500,000 முறை போடப்படக்கூடிய ஃபைசர் தடுப்பூசிகளை சிங்கப்பூரிடமிருந்து ஆஸ்திரேலியா இவ்வாரம் பெற இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு இருப்பதை நேற்று இரு நாடுகளும் அறிவித்தன.
இதே எண்ணிக்கையிலான ஃபைசர் தடுப்பூசிகளை டிசம்பர் மாதம் சிங்கப்பூருக்கு ஆஸ்திரேலியா வழங்கும். இந்த தடுப்பூசிப் பகிர்வு முறை இரு நாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாக நீடிக்கும் தோழமையைப் பிரதிபலிப்
பதாக சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தமது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டார்.
"ஆஸ்திரேலிய மக்கள் இயன்ற வரை சீக்கிரம் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான முயற்சிகளுக்கு சிங்கப்பூர் ஆதரவளிப்பது மகிழ்ச்சிக்குரியது. கொள்ளைநோய்க்கு எதிரான போராட்டத்தில் நாடுகள் ஒன்றிணைய வேண்டும். அப்போதுதான் புதிய வழக்கநிலையை நோக்கி உலகம் நகர முடியும். சிங்கப்பூர் அதற்குத் தயா ராக உள்ளது," என்று திரு லீ தெரிவித்துள்ளார்.
500,000 முறை போடப்படக்
கூடிய தடுப்பூசிகள் டிசம்பர் மாதம் சிங்கப்பூருக்குத் திரும்பக் கிடைக்கும்போது அதனை 'பூஸ்டர்' தடுப்பூசியாக நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். தடுப்பூசி மருந்தை பகிர்ந்துகொள்வதற்காக சிங்கப்பூர் அரசாங்கத்திற்கும் பிரதமர் லீக்கும் ஆஸ்திரேலியப் பிரதமர் ஸ்காட் மோரிசன் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
"கூடுதலாகக் கிடைக்கும் 500,000 முறை போடப்படக்கூடிய தடுப்பூசிகள் நம்பிக்கையின் அடையாளம்," என்று அவர் கூறியுள்ளார். இதன் மூலம் ஆஸ்திரேலியா தனது தடுப்பூசி நடவடிக் கையை விரைவுபடுத்த முடியும் இந்த மாதம் நடுப்பகுதியில் என்றும் 12 வயது முதல் 15 வயது வரையிலான இளையருக்கும் தடுப்பூசித் திட்டத்தை விரிவு
படுத்த உதவியாக இருக்கும்
என்றும் திரு மோரிசன் கூறினார்.

