இலங்கையில் கடும் உணவுத் தட்டுப்பாடு: அவசரநிலை அறிவிப்பு

இலங்கையில் கடும் உணவுத் தட்டுப்பாடு: அவசரநிலை அறிவிப்பு

2 mins read

இலங்கை அர­சாங்­கம் உண­வுப் பற்­றாக்­கு­றை­யைச் சமா­ளிக்­கும் பொருட்டு அவ­ச­ர­நி­லையை அறி­வித்துள்­ளது. அந்­நி­யச் செலா­வணி கையி­ருப்பு குறை­வ­தால் உண­வுப் பொருள்­களை இறக்­கு­மதி செய்­வ­தற்­கான நிதி உத­வியை தனி­யார் வங்­கி­க­ளால் செய்ய இய­ல­வில்லை.

கடு­மை­யான பொரு­ளி­யல் நெருக்­க­டியை நாடு சந்­தித்து வரு­வ­தால் உண­வுப்பொருள்­க­ளைப் பதுக்­கு­வ­தைத் தடுப்ப­தற்­கான அவ­ச­ர­நிலை விதி­மு­றை­களை அதி­பர் கோத்­த­பய ராஜ­பக்சே நேற்று அறி­வித்­தார்.

குறிப்­பாக, அரிசி, சர்க்­கரை மற்­றும் பல அத்­தி­யா­வ­சிய உண­வுப்­பொ­ருள்­களை பதுக்­கு­வ­தற்கு எதி­ரான உத்­த­ர­வு­களை அவர் பிறப்­பித்­தார்.

அதே­நே­ரம் நெல், அரிசி, சர்க்­கரை மற்­றும் இதர பய­னீட்­டா­ளர் பொருள்­க­ளின் விநி­யோ­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்க உயர்­நிலை ராணுவ அதி­காரி ஒரு­வரை அத்­தி­யா­வ­சி­யச் சேவை­க­ளின் தலைமை ஆணை­ய­ராக அதி­பர் பெயர் குறிப்­பிட்­டார்.

அரிசி, உரு­ளைக்­கி­ழங்கு, வெங்­கா­யம் மற்­றும் சர்க்­கரை போன்ற உண­வுப் பொருள்­க­ளின் விலை அதி­க­மாக ஏறி­விட்­டன. மேலும், சமை­யல் எரி­வாயு, மண்­ணெண்­ணெய், பால் மாவு போன்ற பொருள்­க­ளுக்­குத் தட்­டுப்­பாடு நில­வு­கிறது. இது­போன்ற கார­ணங்­க­ளைத் தொடர்ந்து அர­சாங்­கம் அவ­ ச­ர­நிலையை அறி­விக்­கும் முடிவை எடுத்­தது. உண­வுப் பொருள்­க­ளைப் பதுக்­கு­வோ­ருக்கு எதி­ரான தண்­ட­னை­யை­யும் அர­சாங்­கம் அதி­க­ரித்­துள்­ளது. சுமார் 21 மில்­லி­யன் மக்­கள்­தொ­கை­யைக் கொண்ட இலங்­கை­யில் இது­வரை 200க்கும் மேற்­பட்­டோ­ரின் உயிரை கொவிட்-19 கொள்­ளை­நோய் பறித்­து­விட்­டது.

மேலும், கடந்த ஆண்டு மார்ச் முதல் இலங்­கை­யின் பொரு­ளி­யல் 3.6 விழுக்­காடு சுருங்­கி­விட்­டது. அந்­நி­யச் செலா­வணி கையி­ருப்­பைப் பத்திரப்படுத்தும் நோக்­கில் வாக­னங்­களை இறக்­கு­மதி செய்­ய­வும் தாவர எண்­ணெய் போன்ற இத­ர பொருள்­க­ளை­யும் இறக்­கு­மதி செய்ய தடை விதிக்­கப்­பட்­டது.

உண­வுப்­பொ­ருள்­க­ளை­யும் மருந்­துப் பொருள்­க­ளை­யும் இறக்­கு­மதி செய்யத் தடை இல்லை என்­ற­

போ­தி­லும் அவற்றை வாங்­க போது மான அமெ­ரிக்க டாலர் கிடைக்­கா­மல் இறக்­கு­ம­தி­யா­ளர்­கள் சிர­மப்­ப­டு­கின்­ற­னர்.

உள்­ளூர் நாண­யத்­தின் வெளிப்­பு­ழக்­கத்­தைக் கட்­டுப்­ப­டுத்­தும் பொருட்டு இலங்கை மத்­திய வங்கி இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் வட்டி விகி­தங்­களைக் கூட்­டி­யது.

இதற்­கி­டையே, இலங்கை எரி­சக்தி அமைச்­சர் உதய கம்­மன்­பில ஒரு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார். அத்­தி­யா­வ­சிய மருந்­துப் பொருள்­

க­ளை­யும் கொவிட்-19 தடுப்­பூ­சி­

க­ளை­யும் வாங்க அந்­நி­யச் செலா­வணி பயன்­ப­டுத்­தப்­பட இருப்­ப­தால் எரி­பொ­ருளை சிக்­க­ன­மா­கப் பயன்­

ப­டுத்­து­மாறு வாக­ன­மோட்­டி­களை அவர் கேட்­டுக்­கொண்­டார்.

அதே­நே­ரம் எரி­பொ­ருள் பயன்­பாடு குறை­யா­த­பட்­சத்­தில் ஆண்­டி­று­திக்­குள் எரி­பொ­ரு­ளுக்­கான பங்­கீட்­டு­முறை அறி­மு­கம் செய்­யப்­ப­ட­லாம் என அதி­பர் அலு­வ­லக அதி­காரி ஒரு­வர் கூறினார்.