சிங்கப்பூரின் வளர்ச்சி விகித கணிப்புகள் உயர்வு: நாணய ஆணையம்

1 mins read
ca4ab50f-6a8f-46d6-85e8-abc33a5fb10a
-

சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சி விகிதத்தை தனியார் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் உயர்த்தியுள்ளனர். சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் ஆக அண்மை காலாண்டு அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் இவ்வாண்டு 6.6 விழுக்காடு வளர்ச்சி அதிகரிக்கும் என்று இந்த நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். ஜூன் மாதத்தில் இதே விகிதம் 6.5 விழுக்காடு என முன்னுரைக்கப்பட்டிருந்தது.

அனைத்துலக பயணத்தின் தொடர்பிலான நாட்டு எல்லைகளின் திறப்பு,

கொவிட்-19 கிருமிப்பரவலை செயல்திறனுடன் சிங்கப்பூர் கட்டுப்படுத்தியது, நினைத்ததைவிட வலுவான உற்பத்தி வளர்ச்சி, பெருகியுள்ள மின்னியல் பொருட்களின் தேவை ஆகியவை இந்த நம்பிக்கைக்குக் காரணம். அதே நேரத்தில், கொவிட்-19 கிருமிப்பரவல் அதிகரித்தால் பொதுச் சுகாதாரக் கட்டுப்பாடுகள் கடுமையாகி பொருளியலை மீண்டும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக பொருளியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

உருமாறிய டெல்ட்டா கிருமி வகையால் பெருகியுள்ள கொவிட்-19 சம்பவங்களால் தளவாட தொடர்களில் (supply chain) இடையூறுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்தனர்.

இதனால் வர்த்தக நடவடிக்கையும் பாதிக்கப்படுமென்று கருதப்படுகின்றது.