மலேசியா: வருகையாளரின் கொவிட்-19 தடுப்பூசிச் சான்றிதழ் சரிபார்க்கப்படும்

மலே­சி­யா­வுக்­குள் வரு­வோ­ரது கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூ­சிச் சான்­றி­தழ்­கள், சுகா­தார அதி­கா­ரி­களால் சரி­பார்க்­கப்­படும் என்று அந்­நாட்­டின் அறி­வி­யல், தொழில்­நுட்ப, புத்­தாக்க அமைச்­சர் ஆதம் பாபா நேற்று கூறி­னார்.

பய­ணி­கள் மட்­டு­மன்றி மலே­சி­யர்­களும் சரி­பார்ப்­ப­தற்­குத் தங்­களின் சான்­றி­தழ்­களை வழங்க வேண்­டும் என்­றார் அவர்.

"சிங்­கப்­பூர் போன்ற மற்ற நாடு­களில் தங்­க­ளின் தடுப்­பூ­சி­க­ளைப் போட்­டுக்­கொண்ட மலே­சி­யர்­கள், தங்­க­ளுக்கு மிக அரு­கில் இருக்­கும் வட்­டார சுகா­தார அலு­வ­ல­கத்­திற்­குச் சென்று, வெளி­நாட்­டில் கொவிட்-19க்கு எதி­ரான தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளப்­பட்­ட­தைத் தெரி­விக்க வேண்­டும்," என்­றார் திரு ஆதம்.

வெளி­நா­டு­கள் வழங்­கி­யுள்ள கொவிட்-19 தடுப்­பூசி சான்­றி­தழ்­களைச் சரி­பார்க்­கும் மாநில சுகா­தா­ரப் பிரி­வுக்கு அலு­வ­ல­கம் பின்­னர் அந்­தத் தக­வ­லைத் தெரி­வித்­தி­டும்.

அதை­ய­டுத்து, நெருக்­க­டிக்­கால தயார்­நிலை மற்­றும் செயல்­பாட்டு நிலை­யத்­திற்கு (சிபி­ஆர்சி) அத்­த­க­வல் தெரி­விக்­கப்­படும். பின்­னர், சிபி­ஆர்சி 'மைசெ­ஜாத்ரா' செயலி மூலம் மலே­சி­யச் சான்­றி­தழ் ஒன்றை வழங்­கும்.

'மைசெ­ஜாத்ரா' செய­லி­யின் அம்­சங்­கள் மேம்­ப­டுத்­தப்­பட்டு வரும் நிலை­யில், இவ்­வாறு வெளி­நாட்டு கொவிட்-19 தடுப்­பூசி சான்­றி­தழை அடை­யா­ளம் காணும் அம்­ச­மும் அதில் அடங்­கும். தொடர்­பு­க­ளின் தட­ம­றி­யும் நடை­மு­றையை மேலும் எளி­தாக்க, ஓர் இடத்தை விட்டு வெளி­யே­றும்­போது செய­லி­யில் அதைப் பதிவு செய்­யும் அம்­ச­மும் அறி­மு­கம் கண்­டுள்­ளது.

"மலே­சி­யர்­களோ வெளி­நாட்­ட­வரோ, வெளி­நாட்­டில் அவர்­களுக்கு வழங்­கப்­பட்ட தடுப்­பூ­சிச் சான்­றி­தழ் போலி­யா­னது அல்ல என்­பதை உறு­திப்­ப­டுத்­து­வதே முக்­கி­ய­மா­னது," என்­றார் டாக்­டர் ஆதம்.

அத்­து­டன் அவர்­க­ளுக்­குக் கிடைத்த தடுப்­பூசி வகை­களை அறிந்­து­கொள்­ள­வும் இது உத­வி­யாக இருக்­கும் என்று கூறப்­பட்­டது.

மலே­சிய எல்­லை­களில் அமைந்­துள்ள அனைத்­து­லக பாதை­களில் நிறுத்­தப்­பட்­டுள்ள சுகா­தா­ரப் பணி­யா­ளர்­கள், இந்­தத் தடுப்­பூ­சிச் சான்­றி­தழ்­களை சோத­னை­யிட்டு சரி­பார்ப்­பர் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே லங்­காவி தீவு­ட­னான பயண ஏற்­பாடு இம்­மா­தம் 16ஆம் தேதி­யன்று தொடங்­க­விருப்­பது குறித்­தும் டாக்­டர் ஆதம் பேசி­யி­ருந்­தார்.

கொவிட்-19 தடுப்­பூ­சி­களை முழு­மை­யாக போட்­டுக்­கொண்ட சுற்­றுப்­ப­ய­ணி­க­ளின் வரு­கை­யைக் கண்­கா­ணிப்­ப­தற்­காக தீவின் நுழை­வி­டங்­களில் சுகா­தா­ரப் பணி­யாளர்­கள் இருப்­பர் என்று டாக்­டர் ஆதம் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!