வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடுத்த வாரம் முதல் அனுமதி முன்னோடித் திட்டம்: வாராவாரம் 500 பேர் வரை சமூகத்தில் கலந்துறவாட ஏற்பாடு

விடு­தி­களில் தங்கி உள்ள வெளி­நாட்டு ஊழி­யர்­களைச் சமூ­கத்­து­டன் கலந்­து­ற­வாட அனு­ம­திக்­கும் ஒரு முன்­னோ­டித் திட்­டம் அடுத்த வாரம் தொடங்­கு­கிறது.

தொடக்­க­மாக விடு­தி­க­ளைச் சேர்ந்த, முற்­றி­லும் தடுப்­பூசி போட்டுக்­கொண்ட 500 ஊழி­யர்­கள் வரை சமூ­கத்­தில் குறிப்­பிட்ட இடங்­க­ளுக்­குச் சென்று வர, வாரம் ஆறு மணி நேரம் வரை அனு­மதிக்­கப்­ப­டு­வார்­கள்.

அப்­படி அனு­ம­திக்­கப்­படும் ஊழி­யர்­கள் தங்கி இருக்­கும் விடுதி­களில் முந்­தைய இரண்டு வார காலத்­தில் கொவிட்-19 தொற்று இருந்­தி­ருக்­கக்கூடாது.

விடு­தி­களில் நல்ல பாது­காப்பு வசிப்­பிட நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருக்க வேண்­டும். தங்கி இருக்­கும் ஊழி­யர்­களில் 90 விழுக்­காட்­டி­னர் தடுப்­பூசி போட்டிருக்க வேண்­டும் என்று மனி­த­வள அமைச்சு அறி­வித்­தது.

அடுத்த வாரம் தொடங்­கும் முன்­னோ­டித் திட்­டத்­தில் அடை­யா­ளம் காணப்­பட்டு இருக்­கும் முதல் இடம் லிட்­டில் இந்­தியா.

அங்கு செல்­வ­தற்கு முன்­ன­தாக ஊழி­யர்­கள் கொவிட்-19 விரைவுப் பரி­சோ­தனை செய்து கொள்ள வேண்­டும்.

சென்று வந்­த­தற்­குப் பிறகு மூன்று நாட்கள் அந்­தச் சோதனைக்கு உட்­பட வேண்­டும்.

அமைச்சு, ஒரு மாத காலம் இந்த முன்­னோ­டித் திட்­டத்தை மதிப்­பிட்டு வரும். அதற்­குப் பிறகு இந்­தத் திட்­டத்­தைப் பாது­காப்­பான முறை­யில் எந்த அள­வுக்கு, எப்படி நீட்­டிக்­க­லாம் என்­பதை அது முடிவு செய்­யும்.

அமைச்சு வரும் திங்­கள் முதல் இதர பல கட்­டுப்­பா­டு­க­ளையும் தளர்த்­து­கிறது.

விடு­தி­களில் வசிக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கான புதிய கட்­டாய சுய பரி­சோ­தனை ஏற்­பா­டும் அன்­று­தான் தொடங்­கு­கிறது.

இதன்­படி, ஊழி­யர்­கள் காலக்­கி­ரம முறைப்­படி தங்­க­ளைத் தாங்களே பரி­சோ­தித்­துக்கொள்­ள­வேண்­டும். ஒவ்­வொரு ஏழு நாட்­களுக்­கும் அல்­லது 14 நாட்­க­ளுக்­கும் ஒரு முறை ஊழி­யர்­கள் உட்­பட வேண்­டிய பரி­சோ­த­னையுடன் கூடுதலாக இந்த ஏற்­பாடு இடம்­பெ­று­கிறது.

தங்குவிடுதியில் வசிக்கும் வெளிநாட்டு ஊழி­யர் அனை­வரும் வரும் திங்­கள் முதல் தங்­க­ளுக்­கு­ரிய பொழு­து­போக்கு இடங்­களுக்கு வாரம் இரண்டு முறை சென்று வர­லாம்.

திரைப்­ப­டங்­கள், விளை­யாட்டு நிகழ்ச்­சி­கள், சமய நிகழ்ச்­சி­கள் போன்ற நட­வ­டிக்­கை­களை அம­லாக்க, அரசு சாரா அமைப்­பு­களு­டன் சேர்ந்து அமைச்சு செயல்­படுத்தும். அரசு சாரா அமைப்­பு­கள் ஏற்­பாடு செய்­யும் உள்­ளூர் கவர்ச்சி இடங்­க­ளுக்­கான மகிழ் உலா­வும் அனு­ம­திக்­கப்­படும்.

இதில் கலந்­து­கொள்­வ­தற்கு முன்­ன­தாக அனை­வ­ரும் கொவிட்-19 பரி­சோ­த­னைக்கு உட்­பட வேண்­டும்.

இத­னி­டையே, நேற்று வெஸ்ட்­லைட் மண்­டாய் தங்குவிடு­திக்­குச் சென்ற மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் கோ போ கூன், புதன்­, சனி, ஞாயிற்றுக்­கி­ழ­மை­களில் காலை­யி­லும் மாலை­யி­லும் ஊழி­யர்­கள் லிட்­டில் இந்­தியா செல்ல அனு­ம­திப்­பது முதல் திட்­ட­மாக இருக்­கிறது என்று தெரிவித்தார்.

காலை, மாலை ஒவ்­வொரு நேரத்­தி­லும் ஏறத்­தாழ 80 ஊழி­யர்­கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வார்­கள் என்­றார் அவர். சமூக வரு­கை­களைப் பொறுத்தவரை­ திட்­ட­வட்­ட­மான நிகழ்ச்சி நிரல் இராது.

ஊழி­யர்­கள் முத­லில் வழி­பாட்டு இடங்­க­ளுக்­குச் செல்­ல­வும் பிறகு குறிப்­பிட்ட இடங்­களுக்குள் கடை­க­ளுக்கும் உண­வ­கங்­களுக்கும் தாரா­ள­மா­கச் சென்று வரவும் அனு­ம­திப்­பது சாத்­தி­ய­மான ஒன்­றாக இருக்­கும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

இதனிடையே, இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று சில வெளிநாட்டு ஊழியர்கள் தமிழ் முரசு செய்திக் குழுவிடம் தெரி வித்தனர்.

“கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு, விடிவு காலம் பிறந்துள்ளது,” என்று கடந்த ஏழு ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வரும் குளிர்சாதன தொழில்நுட்பர் திரு சுப்பையா ஞானமணி தெரிவித்தார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!