இரட்டைக் கோபுர பயங்கரவாதத் தாக்குதல் நடந்து 20 ஆண்டுகளாகிவிட்டபோதும் அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீண்டு வர முடியவில்லை. 2001 செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மீதும் வாஷிங்டனில் அமெரிக்க ராணுவத் தலைமையகமான 'பென்டகன்' மீதும் பயங்கரவாதிகள் விமானங்களை மோத விட்டு நடத்திய தாக்குதல்களில் ஏறத்தாழ 3,000 பேர் கொல்லப்பட்டனர். அதற்குக் காரணமான அல் காய்தா அமைப்பையும் அதன் தலைவர் ஒசாமா பின் லேடனையும் அழிக்க, உடனடியாக ஆப்கானிஸ்தானில் தாக்குதலில் இறங்கியது அமெரிக்கா. பாகிஸ்தானில் மறைந்திருந்த பின் லேடன் 2011ல் கொல்லப்பட்டார். தாக்குதல்களில் மாண்டோரை 'ஒளியஞ்சலி' மூலம் நினைவு கூர்வதற்கான ஒத்திகை கடந்த 7ஆம் தேதி நியூயார்க்கில் மேன்ஹேட்டனில் இடம்பெற்றது. படம்: ஏஎஃப்பி
ஆண்டு பல கடந்தும் மீண்டுவர இயலவில்லை
1 mins read
-

