கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் மரணமடையும் சாத்தியம் 11 விழுக்காடு அதிகம் என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் நடத்திய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அமெரிக்க அரசாங்க ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததற்கு மறுநாள் சில ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தடுப்பூசியின் ஆற்றலையும் தொற்றுகள், மருத்துவமனை அனுமதி, மரணம் போன்றவற்றுக்கு எதிராக அது செயல்படும் விதத்தையும் அந்த ஆய்வுகள் விளக்கி உள்ளன.
அவற்றில் ஒன்று 13 மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டது. அமெரிக்காவின் மொத்த மக்கள்தொகையில் சுமார் கால்வாசிப் பேர் வசிக்கும் இம்மாநிலங்களில் 600,000க்கும் மேற்பட்டோர் கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாண்டு ஏப்ரல் முதல் ஜூலை வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, ஒரு தடுப்பூசிகூட போட்டுக்கொள்ளாதோருக்கு ஆபத்து அதிகம் என்பதைச் சுட்டியுள்ளது.
அவர்கள் எளிதில் கிருமித்தொற்றுக்கு ஆளாகும் சாத்தியமும் மரண மடையும் சாத்தியமும் அதிகம் என்று குறிப்பிடும் அந்த ஆய்வு அதற்கான வாய்ப்புகள் எந்த அளவுக்கு இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களைவிட ஒரு தடுப்பூசிையும் போடாதவர் நோய்த்தொற்றுக்கு ஆளாகும் சாத்தியம் 4½ மடங்கு அதிகம்; மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் சாத்தியம் 10 மடங்கு அதிகம்; மரணமடையும் சாத்தியம் 11 மடங்கு அதிகம் என்கிறது ஆய்வு.
எனவே, தற்போது அதிக வீரியத் துடன் பரவும் டெல்டா கிருமி வகை யையும் தடுப்பூசியால் தடுக்க இயலும் என்று ஆய்வு குறிப்பிடு கிறது. இருப்பினும் கிருமி தொற்று வதைத் தடுக்கும் தடுப்பூசியின் ஆற்றல் 91 விழுக்காட்டிலிருந்து 78 விழுக்காட்டுக்குக் குறைந்திருப்பதாக அது கண்டறிந்துள்ளது.

