'அடுத்த சில வாரங்கள் நெருக்கடியானவை'

'அடுத்த சில வாரங்கள் நெருக்கடியானவை'

2 mins read

அதிக உயி­ரி­ழப்­பின்றி தற்­

போ­தைய கொவிட்-19 சூழ­லைக் கடந்து­விட்­டால் அது இந்­தப் போராட்­டத்­தில் சிங்­கப்­பூர் இது­வரை பார்க்­காத வெற்­றி­யாக அமையும் என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கூறி­யுள்­ளார்.

அதி­க­மா­னோ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டும்­போது மரண எண்­ணிக்­கை­யும் கடு­மை­யா­கப் பாதிக்கப்­ப­டு­வோர் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரிக்­கி­றதா என்­பதை அறிய, நிலை­மையை மிக அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து வரு­வ­தாக அவர் தெரி­வித்­தார்.

ஆசி­யான்-ஐரோப்­பிய ஒன்­றிய சுகா­தார உச்­ச­நிலை மாநாட்­டில் காணொளி மூலம் பேசிய அமைச்­சர் ஓங், டென்­மார்க் போன்ற ஐரோப்­பிய நாடு­களில் பெரும்­பாலா­னோர் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்­ள­தால் அங்கு கொவிட்-19 கிரு­மித்­தொற்று ஏற்­பட்டு மரண

மடை­வோ­ரின் எண்­ணிக்கை மிகக் குறை­வாக உள்­ள­தைச் சுட்­டி­னார்.

எனி­னும், பல கொவிட்-19 அலை­க­ளைக் கடந்த பின்­னரே இந்த நாடு­கள் இந்­நி­லையை அடைந்­துள்­ள­தாக அவர் கூறி­னார்.

மாறாக, சிங்­கப்­பூ­ரில் தற்­

போ­தைய கொவிட்-19 அலை சுமார் 23 நாட்­க­ளுக்கு முன் தொடங்­கி­யது. ஆக அண்­மைய கொவிட்-19 அலை­யில் குறைந்­தது 6,600 பேருக்­குப் புதி­தாக கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது. ஏழு பேர் அவ­சர சிகிச்சை பிரி­வில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­னர்.

நேற்­றைய நில­வ­ரப்­படி புதிய அலை­யின் கார­ண­மாக இது­வரை இரு­வர் மர­ண­ம­டைந்­த­னர்.

"முன் அனு­ப­வம் இல்­லாத, இயல்­பான எதிர்ப்­பு சக்தி இல்­லாது, தடுப்­பூசி தந்­துள்ள எதிர்ப்பு சக்­தியை மட்­டுமே கொண்டு

சிங்­கப்­பூர் இந்­தப் புதிய கொவிட்-19 அலையை எதிர்­கொள்­கிறது," என்­றார் திரு ஓங்.

எனவே, அடுத்­த­கட்ட நட­வ­டிக்­கையை எடுப்­ப­தற்கு முன்பு ஒன்­றுக்­குப் பல­முறை யோசிப்­பது மிக­வும் முக்­கி­யம் என்று

அமைச்­சர் ஓங் கூறி­னார்.

கொவிட்-19 தடுப்­பூசி போட்டுக் ­கொள்­வது கட்­டா­ய­மாக்­கப்­ப­டுமா என்ற கேள்­விக்­குப் பதி­ல­ளித்த அமைச்­சர் ஓங், தடுப்­பூசி போட்டுக் ­கொள்­ளும் முடிவை மற்ற நாடு­கள் அவற்­றின் குடி­மக்­க­ளி­டமே விட்­டு­வி­டு­கின்­றன என்­றும் அதே அணு­கு­மு­றையை சிங்­கப்­பூர் கடைப்பிடிப்பதாகவும் கூறி­னார்.

கொவிட்-19 நெருக்­க­டி­நி­லைக்­குப் பிந்­திய உல­கிற்­குத் தேவை­யான சுகா­தா­ரத் தீர்­வு­கள் குறித்து உச்­ச­நிலை மாநாட்­டில் கலந்­து­கொண்ட பன்­னாட்டு நிபு­ணர்­கள் கலந்­து­ரை­யா­டி­னர்.

கொவிட்-19 தொடர்பாக சிங்­கப்­பூ­ரின் அனு­ப­வங்­க­ளைப் பற்றி பகிர்ந்­து­கொள்­ளு­மாறு அமைச்­சர் ஓங்­கி­டம் கேட்­கப்­பட்­டது.

நெருக்­க­டி­நி­லை­யின் கோரத் தாண்­ட­வத்தை எதிர்­கொள்ள ஐந்து முக்­கிய அம்­சங்­கள் சிங்­கப்­பூ­ருக்­குக் கைகொ­டுத்­துள்­ள­தாக திரு ஓங் தெரி­வித்­தார்.

துரி­த­மாக நடத்­தப்­பட்ட தடுப்­பூசி போடும் திட்­டம், வலு­வான சமூ­கப் பரா­ம­ரிப்­புத் திட்­டம், காணொளி மூலம் மருத்­து­வ­ரி­டம் ஆலோ­சனை பெறும் முறை, சிங்­கப்­பூ­ரர்­கள் கடைப்­பி­டிக்­கும் தனிப்­பட்ட சுகா­தா­ரப் பழக்­க­வ­ழக்­கம், தடுப்­பூ­சி­களை உற்­பத்தி செய்து விநி­யோ­கிக்­கும் ஆற்­றலை

வளர்த்­தல் ஆகி­யவை கொவிட்-19 பாதிப்­பின் கடு­மை­யைக் குறைக்க உதவி செய்­தி­ருப்­ப­தாக திரு ஓங் பகிர்ந்­து­கொண்­டார்.

இருப்­பி­னும், சிங்­கப்­பூ­ரில் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதால் அடுத்த சில வாரங்­கள் நெருக்­க­டி­யா­னவை என்­று அமைச்சர் ஓங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.