ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடியை தவிர்க்க உலக சமூகத்திற்கு ஐநா கோரிக்கை

ஆப்­கா­னிஸ்­தா­னில் மனி­தா­பி­மான நெருக்­கடி பெரி­ய­ள­வில் ஏற்­ப­டு­வ­தைத் தவிர்க்க அனைத்­து­லக சமூ­கம் உட­னடி­யாக ஆத­ரவு அளிக்க வேண்­டும். அந்த ஆத­ரவு தொடர வேண்­டும் என்று ஐநா அக­தி­கள் அமைப்­பின் தலை­வர் வலி­யுறுத்­திக் கூறி இருக்­கி­றார்.

ஆப்­கா­னில் மனி­தா­பி­மான நெருக்­கடி ஏற்­பட்­டால் அத­னால் உல­கள­வில் தாக்­கங்­கள் ஏற்­படும் என்று அவர் எச்­ச­ரித்­தார். ஐநா அக­தி­க­ளுக்­கான தூதர் பிலிப்போ கிராண்டி ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு மூன்­று­நாள் பய­ணம் மேற்­கொண்­டு பிறகு ஓர் அறிக்­கையை வெளி­யிட்­டார்.

ஆப்­கா­னிஸ்­தா­னில் மனி­தா­பி­மான சூழ்­நிலை தொடர்ந்து மோச­மாக இருந்து ­வ­ரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். அந்த நாட்­டில் அர­சாங்­கச் சேவை­களும் பொரு­ளி­ய­லும் வீழ்ந்­து­விட்­டால் இன்­னும் மோச­மான பாதிப்­பு­கள் ஏற்­படும். நிலை­யில்­லாத சூழ்­நிலை கூடி­வி­டும் என்று அறிக்­கை­யில் அவர் குறிப்­பிட்­டார்.

ஆகை­யால் அனைத்­து­லக சமூ­கம் ஆப்­கா­னிஸ்­தா­னில் விரை­வாக ஈடு­பாடு காட்­ட­வேண்­டும். அங்கு பெரி­ய­ள­வில் மனி­தா­பி­மான நெருக்­கடி ஏற்­ப­டு­வ­தைத் தடுக்க வேண்­டும் என்றாரவர்.

ஆப்­கா­னிஸ்­தான் தலி­பான்­ கட்டுப்­பாட்­டில் வரு­வ­தற்கு முன்­பா­கவே அந்த நாட்டு மக்­களில் ஏறத்­தாழ பாதிப்­பே­ருக்கு அதா­வது 18 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட ஆப்­கா­னி­யர்­க­ளுக்கு மனி­தா­பி­மான உதவி தேவைப்­பட்­டதை அறிக்­கை­யில் அக­தி­க­ளுக்­கான தூதர் கூறினார்.

அந்நாட்­டில் ஏற்­கெ­னவே 3.5 மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்ட மக்­கள் அங்­கு­மிங்­கு­மாக சித­றிக் கிடக்­கி­றார்­கள். பஞ்சம், கொவிட்-19 தொற்று என்று பல பாதிப்பு­களை ஆப்கானிஸ்தான் சந்­தித்து வரு­ கிறது என்­பதை அவர் சுட்­டி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!