சிங்கப்பூரில் கொவிட்-19 அன்றாடப் பாதிப்பு விரைவில் ஆயிரத்தை எட்டக்கூடும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக கொவிட்-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒவ்வொரு வாரமும் இருமடங்கு அதிகரித்து வருவதை அவர் சுட்டினார்.
கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பது எதிர்பாராத ஒன்றல்ல என்று கொவிட்-19க்கு எதிரான அமைச்சர்நிலை பணிக்குழு நேற்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் திரு ஓங் தெரிவித்தார்.
"கொவிட்-19 சூழலை இயல்பான ஒன்றாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும் நாடுகள் ஏதாவது ஒரு கட்டத்தில் நிச்சயம் பெரிய கிருமிப் பரவல் அலையை எதிர்நோக்கியாக வேண்டும்," என்றார் அவர்.
நிலைமை சீரடைவதற்கு முன்பு வேறு வழியின்றி பயணம் செய்ய வேண்டிய பாதையாக சிங்கப்பூர் எதிர்நோக்கும் சூழ்நிலையை அமைச்சர் ஓங் வர்ணித்தார்.
நேற்று முன்தின நிலவரப்படி சிங்கப்பூரில் மேலும் 910 பேருக்கு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டது. அவர்களில் 803 பேருக்கு சமூக அளவில் பாதிப்பு ஏற்பட்டது. வெளிநாட்டு ஊழியர்
களுக்கான தங்குவிடுதிகளில் 103 பேர் நோய்வாய்ப்பட்டனர்.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த நால்வருக்குக் கிருமித்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் புதிய கொவிட்-19 அலை ஏற்பட்டு நேற்றுடன் 26 நாட்கள் ஆகிறது. அடுத்த
நான்கிலிருந்து எட்டு வாரங்
களுக்குள் கிருமிப் பரவல்
உச்சத்தைத் தொடக்கூடும் என்று அமைச்சர் ஓங் கூறினார்.
இரண்டு வாரங்களுக்கு முன்பு அன்றாடப் பாதிப்பு சராசரியாக 146ஆக இருந்தது.
ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த வாரம் 682ஆக ஏற்றம் கண்டது. பாதிப்படைந்தோரில் பெரும்பாலானோருக்கு நோய்க்கான அறிகுறி ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
நோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து குறைவாக இருந்து வருகிறது. நேற்று முன்தின நில
வரப்படி 77 பேருக்கு உயிர்வாயு சுவாசக் கருவி தேவைப்படுவதாகவும் 12 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூர் சில நிச்சயமற்ற சூழ்நிலைகளை எதிர்நோக்குவதாக திரு ஓங் கூறினார்.
பாதிப்பு குறைவதற்கு முன்பு இன்னும் எத்தனை நாட்களுக்கு அன்றாடப் பாதிப்பு அதிகரிக்கும் எனத் தெரியவில்லை என்றார் அவர். அன்றாடப் பாதிப்பு அதி
கரிப்பதால் தீவிர சிகிச்சைப்
பிரிவிலும் மருத்துவமனைகளிலும் படுக்கைப் பற்றாக்குறை ஏற்படுமா என்பது குறித்தும் தெரியவில்லை என்று திரு ஓங் அக்கறை தெரிவித்தார்.
இவற்றைச் சமாளிக்க வீட்டில் இருந்தவாறு குணமடையும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என்றார் அவர். 12 வயதிலிருந்து 69 வயதுக்கு உட்பட்ட கொவிட்-19 நோயாளிகளுக்கு வீட்டில் இருந்தவாறு குணமடையும் திட்டம் கட்டாயமாக்கப்படும். கொவிட்-19 பரிசோதனையைச் சுயமாகச்
செய்துகொள்ளத் தேவையான சாதனங்களைப் பெற்றுக்கொள்ள ஏதுவாக நாடெங்கும் 56 இடங்களில் 100 தானியங்கி இயந்திரங்கள் வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

