புதிய ஊழியர் தங்குவிடுதிகளின் தரநிலைகள் உயர்த்தப்பட்டன

புதிய ஊழியர் தங்குவிடுதிகளின் தரநிலைகள் உயர்த்தப்பட்டன

2 mins read

கி. ஜனார்த்­த­னன்

புதி­தா­கக் கட்­டப்­படும் ஊழி­யர்

தங்­கு­வி­டு­தி­க­ளுக்கு மேம்­ப­டுத்­தப்­பட்ட தர­நி­லை­களை மனி­த­வள அமைச்சு நேற்று அறி­வித்­தது.

ஓர் அறைக்கு அதி­க­பட்­ச­மாக 12 ஊழி­யர்­கள் தங்­கு­வது, கழிப்

பறை­யைப் பகிர்ந்­து­கொள்­ளும் ஊழி­யர்­க­ளின் எண்­ணிக்­கை­யைக் குறைப்­பது ஆகி­யவை புதிய விதி­மு­றை­களில் அடங்­கும்.

ஓராண்டு முழு­வ­து­மாக நடத்­தப்­பட்ட ஆய்வு, சோத­னைத்­திட்­டம் ஆகி­ய­வற்­றுக்­குப் பிறகு இத்­திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

தங்­கு­வி­டு­தி­களில் மக்­கள் நெரி­ச­லைக் குறைப்­ப­தற்­கா­கக்

கட்­டப்­பட்ட 'கியூ­பிடி' எனப்­படும் விரை­வா­கக் கட்­டப்­படும் விடு­தி­களில் இந்­தப் புதிய தர­நி­லை­கள் சோதனை செய்­யப்­பட்­டன.

'பிபிடி' எனப்­படும் குறிப்­பிட்ட கார­ணங்­க­ளுக்­கா­கக் கட்­டப்­படும் விடு­தி­கள், முன்­ன­தாக தொழிற்­சா­லை­களாக இருந்த விடு­தி­கள், தற்­கா­லி­கக் கட்­டு­மான விடு­தி­கள் உள்­ளிட்ட அனைத்­துப் புதிய

விடு­தி­க­ளுக்­கும் இது பொருந்­தும்.

திரட்­டப்­பட்ட கருத்­து­க­ளைக் கருத்­தில் கொண்டு தர­நி­லை­கள் மேம்­ப­டுத்­தப்­பட்­ட­தாக மனி­த­வள அமைச்சு, தேசிய வளர்ச்சி அமைச்சு, சுகா­தார அமைச்சு ஆகி­யவை இணைந்து வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் கடந்­தாண்டு கிரு­மிப்­ப­ர­வல் மிக வேக­மா­கப் பர­வி­யதை அடுத்து, ஊழி­யர்­க­ளின் வாழ்க்­கைத் தரம்

உன்­னிப்­பாக ஆரா­யப்­பட்­டது.

ஏற்­கெ­னவே இயங்கி வரும் தங்­கு­வி­டு­தி­களில் ஒரு படுக்கை அறை­யில் அதி­க­பட்­ச­மாக எத்­தனை பேர் தங்­க­லாம் என்ற வரம்பு இல்லை. இத­னால் அந்த விடு­தி­களில் ஓர் அறை­யில் 12 முதல் 16 வரை­யி­லான ஊழி­யர்­கள் தங்­கும் நிலைமை நில­வு­கிறது.

பெரும்­பா­லான தங்­குவிடு­தி­களில் கிட்­டத்­தட்ட 15 பேர் கழிப்­பறை வச­தி­க­ளைப் பகிர்ந்துகொள்­கின்­ற­னர். புதிய விதி­மு­றை­யின்­படி விடு­தி­க­ளின் புதிய படுக்கை அறை­களில் கம்­பி­யில்லா இணை­யச் சேவை வழங்­கப்­ப­ட­வேண்­டும்.

மேலும், புதி­தாக கட்­டப்­பட்ட விடு­தி­களில் உள்ள ஒவ்­வோர் 1,000 படுக்­கை­க­ளுக்­கும் குறைந்­தது 10 தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட படுக்­கை­கள் இருக்­க­வேண்­டும்.

கிருமிப் பரவல் ஏற்பட்டால் மேலும் 15 படுக்­கை­க­ள் சேர்க்கப்பட வேண்டும். 'பிபிடி' எனப்படும் குறிப்பிட்ட காரணத்திற்காகக் கட்டப்படும் இரண்டு விடுதிகளின் கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும். அவை மூன்று ஆண்டுகளில் கட்டி முடிக்கப்படும்.