'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் லீ

'பூஸ்டர்' தடுப்பூசி போட்டுக்கொண்ட பிரதமர் லீ

1 mins read
d5e0a9a7-71f5-47d4-91a9-7b01ec9b1d0c
-

பிர­த­மர் லீ சியன் லூங், சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யில் நேற்று காலை கொவிட்-19 'பூஸ்­டர்' தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொண்­டார்.

முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்டு எட்டு மாதங்­கள் கழித்து, பூஸ்­டர் தடுப்­பூ­சியை அவர் போட்­டுக்­கொண்­டார்.

"கொவிட்-19 பாதிப்பு வேக­மாக அதி­க­ரித்து வரு­கிறது. கிருமித் தொற்றுக்கு எதி­ராக உங்­கள் பாது­காப்பை பூஸ்­டர் தடுப்­பூசி வலுப்­ப­டுத்­தும்," என்று பிர­த­மர் லீ தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் பதி­விட்­டார்.

60 வயது மற்­றும் அதற்­கும் மேற்­பட்­டோர், நோய் எ­திர்ப்­பாற்­றல் குறை­வாக உள்­ள­வர்­கள், முதி­யோர் பரா­ம­ரிப்பு இல்­லங்­களில் வசிப்­ப­வர்­கள் ஆகி­யோர் பூஸ்­டர் தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளு­மாறு கொவிட்-19 தடுப்­பூ­சி­கள் தொடர்­பான சிங்­கப்­பூ­ரின் நிபு­ணர் குழு பரிந்­து­ரைத்­துள்­ள­தைப் பிர­த­மர் லீ சுட்­டி­னார்.

"உங்­க­ளுக்கு பூஸ்­டர் தடுப்­பூசி வழங்­கப்­பட்­டால் அதைப் போட்­டுக்­கொள்­ளுங்­கள்.

"நீங்­கள் கடு­மை­யாக நோய்­வாய்ப்­படும் அல்­லது தீவிர சிகிச்­சைப் பிரி­வுக்­குச் செல்­லும் சாத்­தி­யத்தை அது குறைக்­கும்," என்­று பிரதமர் லீ அறிவுறுத்தினார்.