உள்ளூரில் புதிதாக 934 பேருக்கு கொவிட்-19 தொற்று; ஏப்ரல் 2020க்கு பிறகு ஆக அதிக ஒருநாள் பாதிப்பு

உள்ளூரில் புதிதாக 934 பேருக்கு கொவிட்-19 தொற்று; ஏப்ரல் 2020க்கு பிறகு ஆக அதிக ஒருநாள் பாதிப்பு

1 mins read
7d93a2f8-68dc-4ee1-8d95-6e8e2c360743
-
Google News Preferred Icon

உள்ளூரில் புதிதாக 934 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) இரவு சுகாதார அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

கடந்த ஆண்டு ஏப்ரலுக்குப் பிறகு பதிவு செய்யப்பட்ட ஆக அதிக ஒருநாள் பாதிப்பு இதுவே.

அவர்களில் 241 பேர் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோர்.

உள்ளூரில் தொற்றுக்கு ஆளானவர்களில் சமூக அளவில் 838 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 96 பேரும் அடங்குவர்.

வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த ஒருவருக்குத் தொற்று உறுதியானது.

மருத்துவமனைகளில் கொவிட்-19 தொற்றுக்காக தற்போது 813 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தின நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 837 ஆக இருந்தது.

அவர்களில் 90 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் 14 பேர் உள்ளனர். கடுமையாக நோய்வாய்ப்பட்டோரில் 82 பேர் 60 வயதுக்கு மேற்பட்டோர்.