தொடக்கநிலை 1 முதல் 5 மாணவர்களுக்கு செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை வீட்டிலிருந்து கற்கும் நடைமுறை

செப்டம்பர் 27 முதல் அக்டோபர் 6 வரை அனைத்து தொடக்கப்பள்ளிகளும் தொடக்கநிலை 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு வீட்டிலிருந்து கற்கும் நடைமுறையைக் கடைப்பிடிக்கும்.

உள்ளூர் அளவில் கொவிட்-19 தொற்று வேகமாக அதிகரித்து வரும் வேளையில், கல்வி அமைச்சு சனிக்கிழமை (செப்டம்பர் 18) இந்த அறிவிப்பை வெளியிட்டது.

தேசிய பாடத்திட்டத்தை வழங்கும் சிறப்புக் கல்விப் பள்ளிகளுக்கும் இந்த நடைமுறை பொருந்தும் என்று அமைச்சு தெரிவித்தது.

“கொவிட்-19 தடுப்பூசிக்கு இன்னும் தகுதிபெறாத மாணவர்களை இந்த ஏற்பாடு நன்கு பாதுகாக்கும்,” என்று அமைச்சு குறிப்பிட்டது.

இவ்வாண்டு தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வு (பிஎஸ்எல்இ) செப்டம்பர் 30ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 6ஆம் தேதி முடிவடைகிறது. தேர்வு தொடங்குவதற்கு முன்பு செப்டம்பர் 25 முதல் 29 வரை தொடக்கநிலை 6 மாணவர்கள் விடுப்பில் (study break) செல்வார்கள்

பள்ளிகளில் கிருமி பரவும் அபாயத்தைக் குறைக்கவும் தனிமை உத்தரவு அல்லது கட்டாய விடுப்பில் வைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் வீட்டிலிருந்து கற்கும் நடைமுறை உதவும் என்று அமைச்சு விவரித்தது.

இந்த நடைமுறை நடப்பில் இருக்கும் காலத்தில் கூடுதல் ஆதரவு தேவைப்படும் மாணவர்களுக்குப் பள்ளிகள் தொடர்ந்து திறந்திருக்கும். பெற்றோரால் வீட்டிலிருந்து வேலை செய்ய முடியவில்லை அல்லது மாற்று பராமரிப்பு ஏற்பாடுகளைச் செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் உதவிக் கோரி பள்ளிகளை அணுகலாம்.

கல்வி அமைச்சின் பாலர் பள்ளிகள், மாணவர் பராமரிப்பு நிலையங்கள் ஆகியவை வழக்கம்போல இயங்கும்.

வீட்டிலிருந்து கற்கும் நடைமுறை நடப்பில் இருக்கும் காலத்தில் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை செய்துகொள்ளுமாறு மாணவர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!