மாதர் சந்தித்து வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் வகையில் உறுதிமிக்க யோசனைகளை உள்ளடக்கிய வெள்ளை அறிக்கை அடுத்த ஆண்டின் தொடக்கப் பகுதியில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் லீ சியன் லூங் தெரிவித்துள்ளார்.
"பெண்களின் அக்கறைக்குரிய பிரச்சினைகளை அறிந்துகொள்ள ஓராண்டு காலமாக நடத்தப்பட்ட மறுஆய்வு நிகழ்வின் கருத்துகள் திரட்டப்பட்டன.
"வெள்ளை அறிக்கையில் இடம்பெறும் யோசனைகளை நடப்புக்குக் கொண்டுவரும் பொருட்டு இந்தக் கருத்துகளை அரசாங்கம் ஆராயும்," என்றார் அவர்.
'சிங்கப்பூரில் பெண்களின் வளர்ச்சி மீதான கலந்துரையாடல்' என்னும் நிகழ்ச்சியின் இறுதி அமர்வில் பங்கேற்றுப் பிரதமர் உரை நிகழ்த்தினார்.
பெண்களுக்கான தளத்தை சரிசமமாக்க உதவும் அரசாங்கத்தின் கொள்கைகளும் திட்டங்களும் கவனம் செலுத்தக்கூடிய மூன்று விரிவான அம்சங்களை அப்போது அவர் பட்டியலிட்டார்.
மேலும் கூடுதலான சரிசம வேலையிட வாய்ப்புகள், அதிகமான பராமரிப்பாளர் ஆதரவு, நேரடியாகவும் இணையம் வாயிலாகவும் பெண்களின் மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு போன்றவை அந்த அம்சங்கள்.
இவை தவிர, சிங்கப்பூர் பெண்களுக்கு மதிப்பளிக்கும் விதமாகவும் முன்னோடியாகத் திகழ்ந்து வழிகாட்டும் அவர்
களின் உணர்வு மற்றும் பங்களிப்புகளைக் கொண்டாடும் விதமாகவும் 'டோபி காட் கிரீன்' பூங்கா அவர்களுக்கான பிரத்தியேக இடமாக அர்ப்பணிக்கப்படும் என்றார் திரு லீ.
பெண்களுக்கான அமைப்புகளின் சிங்கப்பூர் மன்றம் அளித்த யோசனையின் சில அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
சிங்கப்பூர் பெண்கள் நாட்டுக்காகவும் சமூகத்துக்காகவும் பங்காற்றுவதை மையக்கூறாகப் பிரதிபலிக்கும் விதமாக பொது இடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளுக்குப் பெயர் சூட்டும் யோசனை ஒன்றை மகளிர் அமைப்புகளின் சிங்கப்பூர் மன்றம் தெரிவித்துள்ளது.
"நமது சமூகம் முன்னேற்றம் காணும்போது நமது மனப்போக்கும் மாறவேண்டும். அது திடுதிப்பென நடந்துவிடக்கூடியதல்ல. அதனை நோக்கி நாம் செயல்பட்டுக்கொண்ட இருக்க வேண்டும்.
"நடந்துகொள்ளும் விதம், படிப்படியாக மாற்றம் காணும் மனப்போக்கு போன்றவற்றில் கவனம் செலுத்தும் நமது கொள்கைகளும் திட்டங்களும் நீண்டகால முன்னேற்றத்திற்கு நம்மைத் தயார்ப்படுத்தும்.
"எனவே பெண்களும் ஆண்களும் சரிசமப் பங்காளிகளாகத் திகழக்கூடிய நமது சமூகத்தில் உள்ள நீதியையும் நியாய நெறிமுறைகளையும் நாம் தொடர்ந்து வலுப்படுத்த வேண்டும்.
"ஒன்றாக இணைந்து முன்னேற்றம் காணவும் விருப்பங்களை சுதந்திரமாகவும் முழுமையாகவும் அடையவும் இதனைச் செய்ய வேண்டும்.
"அதே சமயம் நம்மிடையே எளிதில் பாதிப்பைத் தரக்கூடியவற்றை அடையாளம் கண்டு அதன் மீது கவனம் செலுத்த வேண்டும்," என்று திரு லீ கேட்டுக்கொண்டார்.
"பெண்களுக்கு வீட்டில் இருக்கும் பொறுப்புகள் அவர்களின் வாழ்க்கைத் தொழில் முன்னேற்றத்தை பாதிக்கக்கூடியதாக இருக்கலாம்.
"அவர்களை வேலையில் அமர்த்தவோ அவர்களுக்குப் பதவி உயர்வு தரவோ சில முதலாளிகள் தயங்கக்கூடும். சில சம்பவங்களில் வேலையிட பாகுபாடும் தோன்றும்.
"இவையெல்லாம் அநீதி. பாரபட்சம் காட்டி பெண்களின் முன்னேற்றத்திற்குத் தடைக்கல்லை முதலாளிகள் ஏற்படுத்தக்
கூடாது," என்றும் பிரதமர் தெரிவித்தார்.
குடும்பங்களின் பராமரிப்புச் செலவுக்குக் கைகொடுக்கும் விதமாக வீட்டுப் பராமரிப்பு மானி யத்தை அதிகப்படுத்துவது தொடர்பான அம்சங்களில் சுகா தார அமைச்சு கவனம் செலுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
'சிங்கப்பூரில் பெண்களின் வளர்ச்சி மீதான கலந்துரையாடல்' என்னும் நடவடிக்கை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கி கிட்டத்தட்ட ஓராண்டு காலம் நீடித்தது. இதன் மூலம் இதுவரை 160 கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு உள்ளன. 5,700க்கும் மேற்பட்டோர் இவற்றில் பங்கேற்றுள்ளனர்.
2022 தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் அறிக்கை

