2.6 மில்லியனுக்கும் அதிகமான முகமூடிகளை விநியோகம் செய்த தெமாசிக் அறநிறுவனம்

தெமாசிக் அறநிறுவனம், முகக்கவச விநியோகத்தைத் தொடங்கி மூன்று நாட்களுக்குப் பிறகு நார்த்பாயிண்ட் கோல்ட் ஸ்டோரெஜ் பேரங்காடிக்குச் சென்ற திருவாட்டி சோங் லீ லீ, 56, அங்கு முகக்கவசங்கள் இல்லை என்பதைக் கண்டார். வேறொரு நாள் அங்கு மீண்டும் திரும்பியபோது இரவு 8 மணிக்கு மேல் ஆனதால் விநியோக முகப்பு மூடப்பட்டிருந்தது .

சிராங்கூன் சென்ட்ரலில் உள்ள நெக்ஸ் கடைத்தொகுதியில் திருவாட்டி சோங் இறுதியில் முகமூடி கவசங்களைப் பெற்றுக்கொண்டார். செப்டம்பர் 14ஆம் தேதியன்று 2.6 பில்லியனுக்கு அதிகமான முகமூடிப் பொட்டலங்கள் பெறப்பட்டிருப்பதாக தெமாசெக் அறநிறுவனம் தெரிவித்தது.

ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று திட்டம் தொடங்கப்பட்டபோது 105,000 குடும்பங்கள் தங்களது முகக்கவசங்களைப் பெற்றுக்கொண்டனர். ஒரு மில்லியனுக்கும் அதிகமான அறுவை சிகிச்சை முகமூடிகளும் என்95 முகமூடிகளும் பெறப்பட்டன. இவ்வாறு முகமூடிகளைப் பெறுவோர் தங்களது வீட்டு மின்சார கட்டண ரசீதைக் கொண்டுவரவேண்டும்.

பொதுவாக மருத்துவ பணியாளர்களால் அணியப்படும் என்95 முகமூடியை கொவிட்-19 இருப்பதாக உறுதி செய்யப்பட்டவர்கள் அணிவது நல்லது. 

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!