கொவிட்-19 பரவல் ஓராண்டில் முடிவிற்கு வரலாம்: மொடர்னா தலைமை நிர்வாகி

ஸூரிக்: உலக நாடுகளுக்குப் போதுமான தடுப்பூசி விநியோகம் இருப்பதை உறுதிசெய்யும் அளவிற்கு தடுப்பூசி தயாரிப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளதால், கொவிட்-19 பெருந்தொற்று ஓராண்டில் முடிவிற்கு வரலாம் என்று தாம் கருதுவதாக மொடர்னா தடுப்பூசி நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஸ்டெஃபான் பேன்செல் தெரிவித்து இருக்கிறார்.

“கடந்த ஆறு மாதங்களாகத் தடுப்பூசி தயாரிப்பு நடவடிக்கைகள் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. அதனால், அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் உலகிலுள்ள அனைவர்க்கும் போடும் வகையில் போதுமான தடுப்பூசிகள் இருக்கும். தேவைப்படும் அளவிற்கு ‘பூஸ்டர்’ தடுப்பூசிகளும் கிடைக்கலாம்,” என்று திரு பேன்செல் கூறியுள்ளார்.

சுவிட்சர்லாந்து நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலின்போது திரு பேன்செல் இவ்வாறு சொன்னார்.

கைக்குழந்தைகளுக்கும் கூடிய விரைவில் தடுப்பூசி கிடைக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“தடுப்பூசி போட்டுக்கொண்டால் குளிர்காலத்தைப் பாதுகாப்பாகக் கடக்கலாம். தடுப்பூசி போடவில்லை எனில், தொற்றால் பாதிக்கப்படவும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவும் நேரிடலாம்,” என்று திரு பேன்செல் எச்சரித்துள்ளார்.

அடுத்த ஆண்டு நடுப்பகுதிவாக்கில் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியுமா என்று கேட்டதற்கு, “இப்போதைய சூழலின்படி, இன்னும் ஓராண்டில் அது நிகழும் என்று கருதுகிறேன்,” என்று அவர் பதில் சொன்னார்.

உருமாறிய ‘டெல்டா’ கிருமி அதிகம் பரவக்கூடியது என்று குறிப்பிட்ட திரு பேன்செல், அதுசார்ந்த மருத்துவச் சோதனைகளைத் தங்களது நிறுவனம் மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

அத்துடன், ‘டெல்டா’, ‘பீட்டா’ உருமாறிய கிருமிகளின் கலவையாக ‘டெல்டா பிளஸ் பீட்டா’ எனும் புதிய திரிபு தோன்றலாம் என அறிவியல் வல்லுநர்கள் நம்புவதால், அது தொடர்பான ஆராய்ச்சியிலும் தாங்கள் ஈடுபட்டு வருவதாக திரு பேன்செல் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!