துவாஸ் எரியாலையில் வெடிப்பு: ஒருவர் மரணம், இருவர் காயம்

துவாஸ் எரியாலையில் வெடிப்பு: ஒருவர் மரணம், இருவர் காயம்

1 mins read
da1cc8e1-e3a3-49c3-89c7-28b2c3e4a235
துவாஸ் எரியாலையில் நேற்று வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

துவாஸ் எரி­யா­லை­யில் நேற்று நடந்த வெடிப்­புச் சம்­ப­வத்­தில், 65 வயது ஆட­வர் ஒரு­வர் உயி­ரி­ழந்து­விட்­டார். அதோடு 59, 64 வய­து­களு­டைய இரண்டு பேர், தீப்­புண் காயங்­க­ளு­டன் சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர்.

துவாஸ் அவென்யூ 20ல் அமைந்­துள்ள ஆலை­யில், பிற்­பகல் 3.15 மணி­ய­ள­வில் வெடிப்­புச் சம்­ப­வம் நிகழ்ந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின்­கீழ் செயல்­படும் ஆலை­யில் மின்­விசை அறை ஒன்­றில் பராமரிப்புப் பணியின்போது வெடிப்புச் சம்­ப­வம் நேர்ந்தது. புகை சூழப்­பட்ட அறைக்­குள் சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை (எஸ்­சி­டி­எஃப்) அதி­கா­ரி­கள் சென்று ஆங்­காங்கே காணப்­பட்ட தீயை அணைத்­த­தாகக் கூறப்­பட்­டது.

கிட்­டத்­தட்ட 80 பேர் வளா­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­தாக எஸ்­சி­டி­எஃப் தெரி­வித்­துள்­ளது.

தீச்­சம்­ப­வம் தொடர்­பில் விசா­ரணை மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறப்­பட்­டது.