சிங்கப்பூர் ஆயுதப் படையினரின் துணையுடன் வீட்டிலேயே குணமடையும் திட்டம் விரிவாக்கம்

சிங்கப்பூர் ஆயுதப் படையினரின் துணையுடன் வீட்டிலேயே குணமடையும் திட்டம் விரிவாக்கம்

2 mins read
efeb2712-6bb3-4308-8055-307cc57b2f1c
இம்மாதம் 15ஆம் தேதி 93 வயதான திருவாட்டி லாய்க்கு அவரது வீட்டிலேயே சிங்கப்பூர் ஆயுதப் படையினர் கொவிட்-19 தடுப்பூசி போட்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

அதி­க­மான கொவிட்-19 நோயாளி­கள் வீட்­டி­லேயே குண­ம­டை­யும் வகை­யில், அவர்­க­ளுக்­குத் தேவை­யான உத­வி­யும் ஆலோ­ச­னை­யும் வழங்கி ஆத­ர­வ­ளிக்­கும் வித­மாக, தொலை­ம­ருத்­து­வம், நேரடி அழைப்பு, 'தோழன்' (Buddy) முறை போன்ற சேவை­களை அதி­கா­ரி­கள் அதி­கப்­ப­டுத்தி வரு­கின்­றனர்.

நிலு­வை­யில் உள்ள அத்­த­கைய உத­விக் கோரிக்­கை­களை விரைந்து கையாள சிங்­கப்­பூர் ஆயு­தப் ­ப­டை­யி­னர் சுகா­தார அமைச்­சிற்­குக் கைகொ­டுத்து வரு­கின்­ற­னர் என்று கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் நேற்­றைய செய்­தி­யா­ளர் சந்­திப்­பின்­போது அதன் இணைத் தலை­வ­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான ஓங் யி காங் தெரி­வித்­தார்.

கணிப்­பைக் காட்­டி­லும் கொவிட்-19 பர­வல் வேக­மாக அதி­க­ரித்து வரு­வதை அடுத்து, இந்த நட­வ­டிக்­கை­கள் இடம்­பெ­று­கின்­றன.

வீட்­டி­லி­ருந்­த­படி குண­ம­டை­வோ­ரி­டம் இருந்து பல புகார்­கள் வந்­தன. நேரடி அழைப்பு எண்­களைத் தொடர்­பு­கொள்ள முடி­ய­வில்லை என்று சிலர் தெரி­வித்­த­னர். வேறு சிலர், அடுத்து என்ன செய்­வது என்­பது தொடர்­பில் அதி­கா­ரி­க­ளின் ஆலோ­ச­னை­யைப் பெற வெகு­நே­ரம் காத்­தி­ருந்­த­தாகக் கூறி­னர்.

இப்­போ­தைக்கு, கொரோனா தொற்­றி­யோ­ரில் 40 விழுக்­காட்­டி­னர்க்­கு­மேல் வீட்­டி­லி­ருந்­த­படி தேறி வரு­கின்­ற­னர்.

அவர்­க­ளின் குறை­க­ளைக் களைய எடுக்­கப்­பட்டு வரும் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அமைச்­சர் வோங் விளக்­கி­னார்.

இல்­லத் தனிமை உத்­த­ர­வின்­கீழ் இருப்­போ­ரின் ஐயங்­க­ளைத் தீர்க்க, அவர்­க­ளு­டன் 'டெலி­கிராம்' செயலி வழி­யா­கச் சுகா­தார அமைச்சு இணைந்­துள்­ளது. வீட்­டி­லி­ருந்­த­படி குண­ம­டை­வோர்க்­கான நேரடி அழைப்­புத் தொடர்­புக் குழுவும் தொலை­ம­ருத்­து­வச் சேவை­களும் விரி­வு­ப­டுத்­தப்­படும்.

வீட்­டி­லி­ருந்­த­படி குண­ம­டை­வோர் தொலை­ம­ருத்­து­வச் சேவையை நாட­லாம். தங்­க­ளி­டம் தோன்­றும் அறி­கு­றி­கள் போன்ற மருத்­து­வம் சார்ந்த அவர்­க­ளின் ஐயங்­க­ளுக்கு மருத்­து­வர்­கள் விடை­ய­ளிப்­பர்.

அர­சாங்­கம் பல்­வேறு நட­வ­டிக்­கை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள­போ­தும், அவற்றை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­முன் கடந்த சில வாரங்­க­ளாக கொரோனா பாதிப்பு அதி­கரித்த வண்­ணம் இருந்­த­தால் தேக்­க­நிலை ஏற்­பட்டு­விட்­ட­தாக அமைச்­சர் ஓங் குறிப்­பிட்­டார்.