தீபாவளித் திருநாளை வரவேற்கும் மின்னும் வண்ணத் தோரணங்கள்

தீபாவளித் திருநாளை வரவேற்கும் மின்னும் வண்ணத் தோரணங்கள்

1 mins read
0e1d075c-7fa4-49a9-8309-2da9d435d03c
சிங்கப்பூரின் சிராங்கூன் சாலையில் தீபாவளி ஒளியூட்டு செப்டம்பர் 25ஆம் தேதி நடந்தது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

அண்மைய ஆண்டுகளில் சிங்கம், யானை, மகாலட்சுமி உருவம் தாங்கிய தோரணங்கள் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் லிட்டில் இந்தியா வட்டாரத்தை அலங்கரிக்க, இவ்வாண்டு கோவில் கோபுரம் என்ற கருப்பொருளுடன் தீபாவளி ஒளியூட்டு அமைந்துள்ளது.

சிராங்கூன் சாலையில் ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும் இந்தக் கோவில் கோபுரத் தோரணம், பண்டிகை உணர்வைக் கூட்டுவதோடு, கவலைகளை மறக்கச் செய்து, நேர்மறையான சிந்தனையை மலரச் செய்வதாக விளங்குகிறது என்று ஏற்பாட்டுக் குழுவினரான லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தினர் தெரிவித்தனர்.

கோயில் கோபுரத்துடன் கூடிய அலங்கார விளக்குகள் சிராங்கூன் சாலை வீதிகளுக்கு ஒளியூட்டும் அற்புதக் காட்சி தீபாவளி நெருங்கிவிட்டதை குறிக்கின்றது.

'லி‌‌‌ஷா' எனும் லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கம் தீபாவளி ஒளியூட்டு விழாவை 2001ஆம் ஆண்டிலிருந்து ஏற்பாடு செய்து வருகிறது.

(விரிவான செய்திகள் நாளைய தமிழ் முரசின் அச்சுப் பிரதியில்)

குறிப்புச் சொற்கள்