அண்மைய ஆண்டுகளில் சிங்கம், யானை, மகாலட்சுமி உருவம் தாங்கிய தோரணங்கள் தீபாவளிப் பண்டிகைக் காலத்தில் லிட்டில் இந்தியா வட்டாரத்தை அலங்கரிக்க, இவ்வாண்டு கோவில் கோபுரம் என்ற கருப்பொருளுடன் தீபாவளி ஒளியூட்டு அமைந்துள்ளது. சிராங்கூன் சாலையில் ஒளிவெள்ளத்தில் காட்சியளிக்கும் இந்தக் கோவில் கோபுரத் தோரணம், பண்டிகை உணர்வைக் கூட்டுவதோடு, கவலைகளை மறக்கச் செய்து, நேர்மறையான சிந்தனையை மலரச் செய்வதாக விளங்குகிறது என்று ஏற்பாட்டுக் குழுவினரான லிட்டில் இந்தியா வர்த்தகர்கள், மரபுடைமைச் சங்கத்தினர் தெரிவித்தனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
தீபாவளித் திருநாளை வரவேற்கும் மின்னும் வண்ணத் தோரணங்கள்
1 mins read
-

